விஜய்க்கு பதிலாக நான் அரசியல் களமிறங்குகிறேன்! எஸ்.ஏ.சி. அறிவிப்பு!! - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 7, 2011

விஜய்க்கு பதிலாக நான் அரசியல் களமிறங்குகிறேன்! எஸ்.ஏ.சி. அறிவிப்பு!!


நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்; அவர் இடத்தில் நான் இருந்து உங்களை வழிநடத்துவேன் என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். நடிகர் விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். அதன் பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் அவர் பேசும்போது, விஜய்யின் எதிர்கால திட்டம் என்ன? விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தகட்ட பணிகள் என்ன என்பதை விரிவாக கூறினார். அவர் பேசியதாவது:

நடிகர் விஜய் இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 2 படங்கள் வீதம் பத்து, இருபது படங்களில் நடிக்க வேண்டியுள்ளதால் இப்போதைக்கு அவர் நேரடியாக அரசியலில் இறங்க மாட்டார். அவருக்கு பதிலாக ஏன், நானும், நீங்களும், அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்யக்கூடாது...?  கடந்த தேர்தலில் அதிமுக அணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று சொன்னது யார்? நான் தான் சொன்னேன். அப்போது நான் சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு முழு மூச்சாக உழைத்தீர்கள் அல்லவா? அதேபோல் நான் உங்களை வழிநடத்துவேன். விஜய் நமக்கு பின்னாடி இருப்பார். அவர்தான் நம் தலைவர். அவர் தான் நம் சக்தி. அந்த சக்தியை நாம் கேடயமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி மக்கள் பணி செய்ய வேண்டும்.

மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவரவர் வார்டுகளில் உள்ள மொத்த ஓட்டுகளில் பாதி பேரை உறுப்பினர்களாக சேருங்கள். உங்கள் வார்டுகளில் பாதி பேரை உறுப்பினர்களாக சேர்த்தவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து என்னை சந்தியுங்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உங்களுக்கு நான் சீட் வாங்கி தருகிறேன். இதை நீங்கள் செய்தால் நீங்கள்தான் உங்கள் வார்டு கவுன்சிலர். விஜய்யை முதலில் நடிகராக போட்டு படம் எடுக்கும் போது, இவனை போட்டு படம் எடுக்கிறாரே சந்திரசேகரனுக்கு என்ன கிறுக்கா? என்று சொன்னார்கள். ஆனால் இன்று விஜய் இளைய தளபதி. அவரை போல் உழையுங்கள். இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்தீர்கள். இனி உங்களுக்காக உழையுங்கள். விஜய்யின் மக்கள் இயக்கத்தை வைத்து கவுன்சிலராக ஆனேன், எம்.எல்.ஏ. ஆக ஆனேன் என்று நீங்கள் சொல்ல வேண்டும், இதை ஒரு சவால் ஆக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

விஜய் அரசியலுக்க வர வேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடத்தில் இருந்துதான் வந்தது. அந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here