வேலாயுதம் ஷூட்டிங் விஜய் போட்ட திடீர் பிரேக்? - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 6, 2011

வேலாயுதம் ஷூட்டிங் விஜய் போட்ட திடீர் பிரேக்?

வேலாயுதம் படப்பிடிப்பு எந்த கட்டத்தில் இருக்கிறது? படம் ஆகஸ்ட்டில் வருமா? இரண்டே கேள்வியோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ரசிகர்களுக்கு தோன்றுகிற அதே கேள்வி, அப்படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவுக்கும் தோன்றியிருப்பதுதான் வேடிக்கை.
கடந்த சில மாதங்களாகவே சுறுசுறுப்பாக போய் கொண்டிருந்த படப்பிடிப்பு, இடையில் Velayudhamசற்றே பிரேக் அடித்து நின்றது. அதன்பின் இம்மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தது. ஆனால் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படமே முடிந்துவிடும் என்ற நிலையில் விஜய்யின் மூட், முற்றிலும் அப்செட்.
டைரக்டர் தரப்பிலிருந்து 'சார்... பத்து நாட்கள் போதும். முடிச்சிரலாம்' என்று ரிக்வெஸ்ட் செய்கிறார்களாம். ஆனால் சாமி வரம் கொடுத்தால்தானே? விஜய்யின் இந்த பிரேக்கிலும் ஒரு நியாயமான காரணம் இருக்கிறதாம். இந்த படத்திற்கு ஒப்பந்தப்படி கொடுத்த தேதிகளை விடவும் அதிக நாட்கள் கொடுத்துவிட்டாராம். அதன்பின்பும் எடுத்துக் கொண்டேயிருந்தால் அவரும்தான் என்ன செய்வார்?
நீங்களாச்சு, ஹீரோவாச்சு. சீக்கிரம் படத்தை முடிக்கிற வழியை பாருங்க என்கிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இந்த முக்கோண சிக்கலில் முழி பிதுங்கும் வேலாயுதம் இம்மாத கடைசியிலாவது முடிவுக்கு வருமா பார்க்கலாம்.
ஆமாம்... கவுண்டமணி வீட்டில் வேலாயுதம் படப்பிடிப்பு நடந்ததாக செய்திகள் வெளிவந்திருக்கிறதே, அதெப்படி என்ற கேள்வி எழுகிறதல்லவா? அது இப்போது எடுத்ததில்லைங்க பிரதர்ஸ். விஜய்யின் பிரேக்கை சமாளிக்க கொடுக்கப்பட்ட செய்திதானாம் அது!

No comments:

Post Top Ad

Responsive Ads Here