விஜய்யின் நன்பன் படத்தின் திரை விமர்சனம் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 13, 2012

விஜய்யின் நன்பன் படத்தின் திரை விமர்சனம்




3 இடியட்ஸ் என ஹிந்தியில் 2009ல் வெளிவந்து, இந்தியாவின் மிகப்பெரிய வசூலைப் பெற்றுக்கொண்ட திரைப்படம், தமிழில் நண்பன் என வெளிவந்திருக்கின்றது. சங்கரின் முதல் ரீமேக் திரைப்படம் என்பது (Remake) இப்படத்தின் முதல் சிறப்பு.
அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி நடித்த பாத்திரங்களில் முறையே விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடித்துள்ளனர். போமன் இராணி நடித்துள்ள பேராசிரியர் வேடத்தில் சத்தியராஜ் நடித்துள்ளார். கரினா கபூர் வேடத்தில் இலியானா. ராஜ்குமார் ஹிராணியின் கதைக்கு, மதன் கார்க்கியோடு இணைந்து திரைக்கதை அமைத்து படத்தினை இயக்கியுள்ளார் பிரமாண்ட இயக்குனர் சங்கர்.
இயக்குனர் சங்கர் கூறியது போல, அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடாமல் (குறிப்பாக எந்திரனுடன்) மற்றும் 3 இடியட்ஸ்சுடனும் ஒப்பிடாமல் பார்த்ததால், தமிழல் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படங்களுள் ஒன்று ‘நண்பன்’.
நண்பன் திரைப்படத்தின் கதை என்று பார்க்கும் போது, எப்போதும் கடுமையான, பாரம்பரிய விதிகளுக்கு உட்பட்டுத்தான் கல்வி முறை இருக்க வேண்டும் என்பதோடு பிள்ளைகள் பொறியிலாளர்களாகவும் வைத்தியர்களாகவும்தான் வரவேண்டும் என்கின்ற எண்ணத்தினையும் அகற்ற வேண்டும் என்பதுதான் கதையின் கரு. நாண்பர்களாக வருகின்ற மூவரும் பேராசியருக்கு கொடுக்கின்ற நெருக்கடியினை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கின்றார்கள். மேலும் கதையின் போக்கில் காதல், நட்பு, சோகம், குடும்ப உறவுகள் என்பன சரியான கலவை. இத்திரைப்படத்தின் முதல் ஹீரோ அதன் திரைக்கதைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளார். அமீர்கானை பல இடங்களில் இமிடேட் செய்திருந்தாலும் ரசிக்க வைக்கின்றார். கதையின் படி படத்தினை நகர்த்திச் கொண்டு போகும் ஸ்ரீகாந்த்துக்கு அருமையான வாய்ப்பு, மிகச்சிறப்பான நடிப்பு. ஜீவா வழக்கம் போலவே வெளுத்துக்கட்டியிருக்கின்றார். சத்தியராஜ் பேராசிரியர் பாத்திரத்திற்கு சரியான தெரிவு. இலியானா, விஜய்க்கு பொருத்தமான ஜோடி அத்தோடு புடவையிலும் ஜொலிக்கின்றார். இவர்கள் எல்லோரையும் தூக்கிக் சாப்பிடும் வேடம் சத்தியனுக்கு, குசும்பனாக படம் தொடங்கி முடியும் வரை பின்னி எடுத்திருக்கின்றார். நண்பன், சத்தியனுக்கு மிகப்பெரிய எதிர்காலம்.
ஹரிஸ் ஜெயராஜிடம் இருந்து மிக நல்ல இசையை சங்கரால் வாங்கமுடியும் என்பதை அன்னியனுக்கு பின்னர் நிருபித்திருக்கின்றார். சங்கர் திரைப்படங்களில் பொதுவாக பாடல்களிலேயே ஒரு படம் இருக்கும். ஆனால் நண்பனில் தனது முந்தைய திரைப்படங்களில் வந்த பாடல் காட்சி பின்னணிகளை ரீமிக்ஸ் செயதிருக்கின்றார். குறிப்பாக அஸ்கு லஸ்கா மற்றும் இருக்கானா பாடல் காட்சிகளில் அன்னியன் மற்றும் சிவாஜி பாடல் காட்சிகள் நினைவில் வருவதை தவிர்க்க முடியாது. மேலும் இருக்கானா பாடல் காட்சியின் ஃபாராகானின் நடன அமைப்பும் விஜய்யின் நடனமும் அசத்தல். அத்ததோடு இலியானாவின் பெல்லியும் கில்லி. மனோஜ் பரமஹம்சாவின் கமராவும் அண்டனியின் எடிட்டிங்கும் படத்தின் நீளம் என்கின்ற எண்ணத்தை முழுமையாக குறைத்து விட்டிருக்கின்றது.
விஜய் நடித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த திரைப்படங்களுள் ஒன்று நண்பன் என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளலாம். அஸ்கு லஸ்கா பாடலில் வருகின்ற பதினாறு மொழிகள், கொஷக்கி பஷப்புகழ் என்பன மதன் கார்க்கியின் இருப்பை தெளிவாக சொல்கின்றன. சங்கர் இயக்குனராக மட்டும் தனது வேலையை மிக்ச்சிறப்பாக செய்திருக்கின்றார். நண்பன் ரசிகர்களிடத்தில் சிகரம் தொடுவான்

No comments:

Post Top Ad

Responsive Ads Here