விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் வேலாயுதம் . இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்க ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பிரமாண்டமாக தயாரித்தார். இப்படம் தரமான பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்ததால் நல்ல விமர்சனங்களுடன் மாபெரும் வசூலையும் பெற்றது. இப்படத்தினால் ஐம்பது கோடிக்கு மேல் லாபம் அடைந்துள்ளனர் தயாரிப்பாளர் மற்று விநியோகிஸ்தர்கள் .இப்படம் விஜய் படங்களில் அதிகளவு வசூலை ஈட்டிய படம் என விநியோகிஸ்தர்கள் கூறினார்.
ஒரு படம் அதிகளவு திரையரங்குகளில் வெளியாவது சவால் அதிலும் வசூல் ஈட்டுவது மாபெரும் சவாலாக உள்ள நிலையில் விஜயின் இப்படம் நல்ல வசூலுடன் தமிழ் நாட்டில் முப்பதற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று நூறாவது நாளை கொண்டாடுகிறது.
விஜய் ஜெனிலியா ஹன்சிகா சரண்யா மோகன் பாஸ்கர் சந்தானம் பாண்டியராஜன் பாண்டி என பெரிய நட்சத்திரப்பட்டாலமே நடித்த இப்படம் நல்ல கதையையும் தரமான தகவலையும் கல கலப்பான விடயங்களையும் கொண்டு அமைந்ததால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தின் இசை இப்படத்திற்கு பிளசாக அமைந்தது. ஆடியோ விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ப்ரியனின் படப்படிப்பு சுபாவின் வசனம் அழகிய சண்டை காட்சி என அனைத்திலும் தரமாக அமைந்த வேலாயுதம் படத்திற்கும் அதன் வெற்றிக்கு உதவியவர்களுக்கும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment