கத்தி படத்திற்கு சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழுவினர் பிஸியாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அனிருத் இசையில், விஜய் கடைசியாக பாடிய பாடல் ஒன்றின் ஷுட்டிங் மட்டுமே இன்னும் மீதமுள்ளது.
இந்நிலையில் தற்போது கத்தி படத்தைப் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், கத்தி படத்தின் முதல் பகுதி வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன.அது மட்டுமில்லாமல் கத்தி படத்தின் இரண்டாம் பகுதியின் முக்கியான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டன என்று குறிப்பிட்டுள்ளார் .
No comments:
Post a Comment