மனித நேயத்தை வளர்க்கும் விதத்தில் கைதிகளுக்காக சேலம் சிறையில் விஜய் நடித்த நண்பன் படம் திரையிடப்பட்டது.கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடையே மனிதநேயத்தை வளர்க்கும் விதத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு படியாக சிறையில் உள்ள கைதிகளுக்கு ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்து வெளியான நண்பன் படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.படத்தை பார்த்து ரசித்த கைதிகள் மிகுந்த கலகலப்புடன் காணப்பட்டனர். அதன் பின்பு அவர்கள் பல விதமான விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர்.தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்ய வேண்டும் என்ற மனநிலையை இந்த படம் உருவாக்கியதாகவும் கைதிகள் தெரிவித்தனர்.
நண்பன் படம் திரையிட்டது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் சார்பில் பேசிய அதிகாரி, இது ஒரு முன்னோட்ட நடவடிக்கைதான்.விரைவில் அனைத்து தமிழக சிறைச்சாலைகளிலும், நல்ல பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை தெரிவு செய்து ஒளிபரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையிலான படத்தை தெரிவு செய்யும் போது சமீபத்தில் வெளியான நண்பன் படம் முதல் இடத்தில் இருந்தது என்றார்.
No comments:
Post a Comment