ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கவிருக்கிறாராம் ஜெய். விஜய்க்குத் தம்பியாக ஜெய் மாறுவது இது 2வது முறையாகும்.
விஜயை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுக்கும் படம் துப்பாக்கி. இதில் விஜயுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். பெப்சி பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. துபபாக்கி படக்குழுவினர் ஒரு மாதம் மும்பையில் தங்கி பல காட்சிகளை படமாக்குகின்றனர். இந்த படத்தில் உங்கள் இளைய தளபதி விஜய் பாடுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் குரலில் பாடல் வரப் போகிறது.
இதில் விஜயக்கு ஒரு தம்பி இருக்கிறாராம். அந்த கதாபாத்திரத்தில் யாரைப் போடுவது என்று யோசித்த இயக்குனருக்கு பகவதியில் ஏற்கனவே விஜய் தம்பியாக நடித்த ஜெய் நினைவுக்கு வந்துள்ளார். உடனே ஜெய்யை அழைத்து விஜய் தம்பியாக நடிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். ஜெய்யுடன் உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம்.
இதையடுத்து இரண்டாவது முறையாக விஜய்-ஜெய் ஆகியோரின் அண்ணன், தம்பி பாசத்தை மீண்டும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய் மட்டுமல்லாமல் அஜீத்துடனும் நல்ல நட்பு பாராட்டி வருபவர் ஜெய். தற்போது விஜய்யுடன் 2வது தடவையாக தம்பியாக நடிக்கவிருப்பதால் பரவசமாகியுள்ளாராம்.
No comments:
Post a Comment