முருகதாஸின் பணிகளைப் பார்க்கும் போது எனக்கு இயக்குநர் மணிரத்னம் நினைவுதான் வரும். அவரை எப்போதும் செல்லமாக குட்டி மணிரத்னம் என்று தான் அழைப்பேன் என்கிறார் விஜய்.
நான் நடித்துள்ள ஒரு சில பொழுதுபோக்குப் படங்களில் துப்பாக்கி சிறந்த படமாக இருக்கும். அனைத்து பெருமையும் முருகதாஸையேச் சேரும். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து எடுத்துள்ளார் என்று முருகதாஸை புகழ்ந்து தள்ளுகிறார் விஜய்.
இப்படத்தில் உங்களுடன் ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால் பற்றி கேட்டதற்கு, தமிழே தெரியாததால் வசனங்களைப் புரிந்து கொள்ள மிகவும் கஷ்டப்படும் காஜல் அகர்வால், ஆனால் வசனம் பேசி நடிக்கும் போது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். மிகவும் ஹார்ட் ஒர்க் நடிகை என்றார் விஜய்.
No comments:
Post a Comment