நண்பன் படத்துக்குப் பிறகு கொஞ்சம் வெரைட்டியாக நடிக்கலாமே என்று விஜய் முடிவெடுத்திருக்கிறார். தமிழகத்துக்கே நன்மைபயக்கும் இந்த முடிவின் ஒரு அங்கம்தான் அவர் கௌதமுக்கு கால்ஷீட் தந்திருப்பது. அதே வேகத்தில் காப்பி இயக்குனர் விஜய்க்கும் கால்ஷீட் தந்திருப்பது நெருடல். போகட்டும்… ஒரே நாளில் யாரும் திருந்த முடியாதே.
மெகா பட்ஜெட் தேவைப்படும் தங்கள் கனவுப் படங்களுக்கு பைனானஸ் கிடைக்க வேண்டும் என்றால் விஜய், அஜித் போன்ற நடிகர்களின் கால்ஷீட் கண்டிப்பாக தேவை. இதனை உணர்ந்துதான் விஜய்யை தேடிப் போனார் கௌதம். இதே காரணத்துக்டகாக விஜய்யை தேடிச் சென்று கதை சொல்லியிருக்கிறார் மிஷ்கின். கதையை கேட்ட விஜய் உடனே ஒப்புதல் எதுவும் தரவில்லை என்றும், மிஷ்கினின் முகமூடி பார்த்த பிறகே முடிவெடுப்பார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
காலதாமதமானாலும் விஜய் மிஷ்கின் படத்தில் நடிப்பார் என்பதே அனைவரின் நம்பிக்கை
No comments:
Post a Comment