சீமான் இயக்கத்தில் பகலவன் என்ற படத்தில் விஜய் நடிக்கப் போவதாக கூறப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் வரை முடித்துவிட்ட கௌதம்மேனன் தனது அடுத்த படத்தி பற்றி கூறியுள்ளார்.
இதை பற்றி பேசிய கௌதம் மேனன் " யோஹான் கதை முழுமையாக தயாராகிவிட்டது. விஜய் இப்போது நடித்துக்க்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தை முடித்ததும் யோஹான் படம் துவங்கப்படும். இந்த படத்தில் நடிக்கும் ஒரே தமிழன் விஜய் தான். ஹீரோயின் ஒரு இந்தியப் பெண். மற்ற நடிகர்களும் நடிகைகளும் வெளிநாட்டவர்கள் என்றாலும் இது ஒரு தமிழ் படம் தான். இந்த படம் ஆங்கில சப்-டைட்டில்களுடன் உலகம் முழுவதும் வெளியிடப்படும்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். யோஹான் கதாபாத்திரத்தை நான் முழுமையாக வெளிக்கொண்டு வந்தாலோ, யோஹானை மக்கள் ஏற்றுக்கொண்டாலோ ஜேம்ஸ் பாண்ட் படம் போல யோஹான் பாகம்-2,3,4 என தொடர்ச்சியாக வெளிவரும்" என்று கூறினார்.
மற்ற படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டாலும் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடக்கிறது என்று விஜய்யின் தந்தையும், தயார்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது சில தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியிருப்பதால் விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு இதனால் எதுவும் பாதிப்பு வருமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
No comments:
Post a Comment