சுதீப், பாவனா, ப்ரியா மணி நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் ‘விஷ்ணுவர்தனா’. இப்படத்தின் இயக்குனர் பொன். குமரன் சென்னையைச் சேர்ந்த தமிழர்.
குமரன் இப்படத்தை விஜய்க்கு போட்டு காட்டியிருக்கிறார். தனக்கேற்ற படமாக இருப்பதால், விஜய் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
‘துப்பாக்கி’, ‘யோஹன்’ .. அதனை அடுத்து இயக்குனர் விஜய்யின் படம் என தொடர்ந்து கால்ஷீட் டைரி நிரம்பி இருப்பதால், இம்மூன்று படங்களுக்குப் பிறகு இந்த ரீமேக் படத்தில் நடிப்பார் என்கிறது கோலிவுட் தகவல்.
இப்போது ப்ரியா மணி நடிப்பில் தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் தயாராகும் ‘சாருலதா’ என்னும் படத்தில் மும்முரமாக இருக்கிறார் பொன்.குமரன். இப்படத்தை வெளியிட்டபின் ‘விஷ்ணுவர்தனா’ படத்துக்கு தமிழில் விஜய்க்கு ஏற்றபடி திரைக்கதை அமைக்கும் பணியில் இறங்குவாராம்.
”அந்த படம் ஆரம்பிச்சா, அதுல பிரகாஷ்ராஜ் தான் வில்லனா நடிப்பாரு..! “
No comments:
Post a Comment