விஜய் நடிக்கும் துப்பாக்கி போலீஸ் கதை அல்ல.... அதிரடி ஆக்ஷன் கதை, என்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.
துப்பாக்கி படத்தின் தலைப்பு விவகாரம் மிகுந்த இழுபறியாக உள்ளது. இந்தத் தலைப்பு கிடைக்குமா, தடை போட்டுவிடுவார்களா என்ற டென்ஷனில் இருக்கிறது படக் குழு.
இதற்கிடையே துப்பாக்கியில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றெல்லாம் செய்தி வெளியாகி வந்தது.
இதுகுறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.
அவர் கூறுகையில், "இந்தப் படத்தின் நாயகன் மும்பையில் வசிக்கும் ஒரு தமிழன். அவனுக்கென்று ஒரு இலக்கும், அவனுடன் ஒரு படையும் இருக்கிறது. படத்தில் போலீஸ் உண்டு. ஆனால் நாயகன் போலீஸ் கிடையாது," என்றார்.
சரி... தீபாவளிக்கு நெருங்கிடுச்சே... ஆடியோ ரிலீஸ் எப்போ?
"நிச்சயம் அக்டோபர் முதல் வாரம் ஆடியோ ரிலீஸ் வச்சிடுவோம்," என்றார் முருகதாஸ்!
No comments:
Post a Comment