சென்னை: துப்பாக்கி படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை ஒரு முறையல்ல இரண்டு முறை பார்த்துவிட்டு இயக்குனரை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
இது குறித்து முருகதாஸ் டுவிட்டரில் குஷியாக கூறியிருப்பதாவது,
நம்ம தலைவர் ரஜினி சர் போன் செய்தார். உங்கள் துப்பாக்கி படத்தை 2 தடவை பாத்தேன். அருமையாக உள்ளது. நல்ல படம் என்றார். சூப்பர் ஹேப்பி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ் ரெட்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டு முருகதாஸை பாராட்டியுள்ளனர். தீபாவளிக்கு ரிலீஸானதுப்பாக்கி இதுவரை உலக அளவில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி காந்த் போன் செய்ததில் முருகதாஸ் ஏக குஷியாக உள்ளார்.
No comments:
Post a Comment