கடந்த ஆண்டு இரு ஹிட்களை கொடுத்தபின் விஜய் வேகமாக இருக்கிறார் என்று விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம். துப்பாக்கி முடிந்தை கையோடு, ‘தலைவா’. அது முடியும் முன் ‘ஜில்லா’ என்று படங்களை ஒப்புக் கொண்டதையே அப்படி குறிப்பிட்டிருந்தோம்.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, விஜய்யின் வேகம் சூப்பர் ஜெட் ஸ்பீடுக்கு எகிறியுள்ளது. ‘ஜில்லா’ ஷூட்டிங் தொடங்கும் முன்னரே, அதற்கு அடுத்த படத்துக்கும் ஓகே சொல்லி விட்டார் என்பதே லேட்டஸ்ட்.
காரணம், துப்பாக்கியில் ஹிட் கொடுத்த முருகதாஸ் சமீபத்தில் விஜய்யை சந்தித்து சொன்ன ‘ஆளை அசத்தும்’ கதை என்கிறது, விஜய் வட்டாரம்.
தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ், தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்தபின், ஏழாம் அறிவு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து விஜய்யுடன் கோர்த்த படம் துப்பாக்கி, இருவருக்கும் மிகப்பெரிய வெற்றி.
துப்பாக்கி ரிரீஸ் ஆவதற்கு முன்னரே, விஜய்யை ஹிந்திககு அழைத்துச் செல்வேன் என்றார் முருகதாஸ். அதற்கிடையே தலைவா, ஜில்லா என்று கமிட் ஆகி விட்டார் விஜய்.
துப்பாக்கிக்கு பின் முருகதாஸ் அஜீத் படம் ஒன்றை இயக்கப் போவதாக ஒரு பேச்சு இருந்தது. முக்கிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் இறங்கியது நிஜம். ஆனால், அஜீத் மற்றும் முருகதாஸ் கேட்ட சம்பளம், கோயிங்-மார்க்கெட் ரேட்டைவிட படத்தின் பட்ஜெட்டை எகிற வைத்துவிடும் என்று புரிந்து கொண்ட பிரபல நிறுவனம், அந்த ப்ராஜெக்டை டேக்ஆஃப்புக்கு முன்னரே அபார்ட் செய்துவிட்டது.
இதன்பின் முருகதால், கமலை வைத்து இயக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கமல், விஸ்வரூபம்-2, அதன்பின் ஹாலிவூட் படம் என்று அடுத்த சில வருடங்களுக்கு பிசி.
இந்த நிலையில் முருகதாஸ், தாம் ஏற்கனவே தயார் செய்திருந்த கதை ஒன்றை விஜய்க்கு சொன்னதாக தெரிகிறது
மிக அட்டகாசமான எலிவேஷன் உடைய ‘ஆளை அசத்தும்’ ஹீரோயிச சப்ஜெக்ட் அது என்கிறார்கள். கேட்ட மாத்திரத்திலேயே, “இதை நாம சேர்ந்து பண்றோம்.. ஜில்லாவுக்கு அடுத்தது இதுதான்” என்றாராம் விஜய்.
பிரமாண்டமாக உருவாக வேண்டிய ஹீரோயிச படம் என்பதால், முதலில் இந்தப் படத்தை கலைப்புலி தாணுவே தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால் இப்போது தாணு இல்லை என்று தெரிகிறது.
அவருக்குப் பதில் லண்டனைச் சேர்ந்த கருணா (ஐங்கரன் இன்டர்நேஷனல்) தயாரிக்கிறார் என்பதே தகவல். இந்த ஐங்கரன் கருணாவின் பின்னணி என்ன?
ஈழத் தமிழரான கருணா, ஏற்கெனவே ரஜினியின் எந்திரன் படத்தை தயாரிக்க தொடங்கியவர். முதல் ஸ்கெட்யூல் முடிந்தபின், அப்போது இருந்த சர்வதேச பொருளாதார சரிவு காரணமாக எந்திரன் ப்ராஜெக்ட்டில் இருந்து கருணா பின் வாங்க, சன் பிக்சர்ஸ் அந்த ப்ராஜெக்ட்டை கையில் எடுத்தது.
அதன்பின் ஐங்கரன் கருணாவுக்கு, அவரது தயாரிப்பில் வெளியான அங்காடி தெரு வந்து, கைகொடுத்தது.
இப்போது, விஜய்-முருகதாஸ் படத்தை தயாரிக்கப் போவது ஐங்கரன் இன்டர்நேஷனல் என்பதே பேச்சு.
துப்பாக்கி திரைப்படத்தை இயக்குவதற்கு முருகதாஸூக்கு சம்பளமாக ரூ.11 கோடி கொடுக்கப்பட்டதாம். துப்பாக்கி படத்தின் வெற்றியின் பின் வரும் படம் என்பதால், இந்தப் புதிய படத்திற்காக முருகதாஸுக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். அது, ரூ.20 கோடி என்று தகவல் உள்ளது.
அப்படின்னா நடிகர் விஜய்யின் சம்பளம்? விண்ணை தொடும் உயரத்தில்தான் இருக்க வேண்டும்!
No comments:
Post a Comment