இளைய தளபதி விஜய் தற்போது இயக்குனர் விஜய்யின் "தலைவா" படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து வருகிறது. 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பாடல் காட்சிகளுக்காக "தலைவா" யூனிட் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது.
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான "ஜில்லா" பற்றி அதன் தயாரிப்பாளர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மிக முக்கிய கேரக்டரில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார். இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் மகத் ராகவேந்திரா நடிக்கிறார். படத்தை மூன்று மொழிகளுக்கும் கொண்டு செல்ல இந்த ஏற்பாடு. விஜய்யுடன் பரோட்டா சூரி காமெடி வேடத்தில் நடிக்கிறார். தமிழ் நாட்டை சேர்ந்தவரும் இந்தியில் முன்னணி ஒளிப்பதிவாளருமான நட்டு என்கிற நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நேசன் இயக்குகிறார்.
படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரியின் மகன் ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார் என்றும் படத்தின் பட்ஜெட் 50 கோடி என்றும் கூறப்படுகிறது. மே மாதம் 2ந் தேதி படப்பிடிப்புகள் தொடங்குகிறது.

No comments:
Post a Comment