தலைவா படத்தையடுத்து விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. மதுரை ஜில்லாவில் நடைபெறும் ஒரு கதையை மையமாகக்கொண்டு இப்படம் தயாராகிறது. அதனால் படத்தில் பேசும் ஒவ்வொரு கேரக்டரும் மதுரை மக்கள் பேசுவது போன்ற சாயலிலேயே டயலாக் பேசி நடித்து வருகிறார்கள். அதோடு, சில நாட்களாக மதுரை சுற்றுவட்டாரத்தின் இயற்கை எழிலை படமாக்கி வந்த டைரக்டர் நேசன், முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்.
முதல் கட்டத்தில் மோகன்லால், பூர்ணிமா, காஜல்அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளாக படமாக்கியவர்கள், இரண்டாம் கட்டத்தில்தான் விஜய்யின் போர்ஷனுக்கு வருகிறார்களாம். அதனால் அடுத்த மாதம் விஜய் சம்பந்தபட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாக உள்ளதாம். மேலும். துப்பாக்கி படத்துக்கு முன்புவரை, துப்பாக்கியும் கையுமாக திரிந்த விஜய், இந்த படத்தில் அருவாலும் கையுமாக திரிகிறாராம். விஜய்க்கு அருவா சுற்றுவது ஒன்றும் புதிதாக விசயமில்லை என்பதால், இந்த படத்தில் அவர் அருவாலுடன் எதிரிகளுடன் மோதும் ஒரு சண்டைக்காட்சியை பிரமாண்டமாக படமாக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் நேசன்.
No comments:
Post a Comment