தலைவா படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடந்து முடிந்தது. இதில் விஜய் தவிர்த்து மற்ற நடிகர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் விஜய் மற்றும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. சமீபத்தில் நிறைவு பெற்ற இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு கடற்கரை சாலை, சாலிகிராமம், மவுண்ட் ரோடு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னையில் படமாக்கி பின்பு வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருக்கின்றனராம். இதுவரை வெளியான விஜய் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறதாம் ‘ஜில்லா’ படம். நண்பன், துப்பாக்கி, தலைவா படங்களைப் போல அல்லாமல் ஜில்லாவில் கிராமத்து இளைஞன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் விஜய். இப்படம் விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment