துப்பாக்கி, தலைவா படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘ஜில்லா’. இப்படம் மதுரையை பின்னணியாகக் கொண்ட கதையில் உருவாகிறது. என்றாலும், முதல்கட்ட படப்பிடிப்பை மட்டுமே மதுரையில் நடத்தியவர்கள் அதன்பிறகு சென்னையில்தான் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தினார்கள். அதையடுத்து இப்போது சண்டை காட்சிகளுக்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.
அங்கு மரத்தினாலான செட் அமைக்கப்பட்டு அதில் விஜய், வில்லன்களுடன் மோதுவது போல் சண்டை காட்சியொன்றை படமாக்கி வருகிறார்களாம்.அந்த காட்சியில் ஏராளமான கேமராக்களை பயன்படுத்துகிறார்களாம். சாதாரணமாக தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மட்டும்தான் பலமுனைகளிலும் கேமராக்களை நிறுத்தி படமாக்குவார்.
அவரையடுத்து இப்போது இந்த படத்துக்குத்தான் அதிகப்படியான கேமராக்களை வைத்து படமாக்குகிறார்களாம். காரணம். தற்போது படமாக்கப்படும் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கிறாராம் விஜய்.
அதனால் அவர் கஷ்டப்பட்டு நடிக்கும் காட்சிகள் கேமரா குறைபாட்டினால் படமாக்கப்படாமல் விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காகவே இப்படி நிறைய கேமராக்களை வைத்து பதிவு செய்து வருகிறார்களாம். ஆக, ஜில்லா படமும் பிரமாண்ட இயக்குனர் படம் போன்று பிரமாண்டமாக உருவாகிறதாம்.
No comments:
Post a Comment