
இளைய தளபதி விஜய் நடித்த வேலாயுதம் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். அதே சமயம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரேவாக அறிமுகமாகும் படம் 'நான்'. ஏற்கனவே தொடங்கப்பட்ட இந்தப் படம் தாமதம் ஆகி வருகிறது. இதற்கு காரணம் நான் தான் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் 'வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு இளைய தளபதியுடன் மீண்டும் கூட்டணி சேர்வதால் ரசிகர்களுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரே சமயத்தில் ஹீரோ பணியும், இசையும் பணியும் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக 'நான்' பட வேலைகளை தற்காலிமாக நிறுத்தி, வேலாயுதம் பட வேலைகள் முழு வீச்சில் ஈடுபட்டேன். வேலாயுதம் பட வேலைகள் முடிந்துவிட்டன. மீண்டும் 'நான்' படப்பிடிப்பில் முழு வீச்சில் தொடங்கியுள்ளேன்' என்றார்.

No comments:
Post a Comment