ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா – ஒரு அலசல் - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 29, 2011

ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா – ஒரு அலசல்


  • விஜய் (63%, 664 Votes)
  • அஜித் (33%, 346 Votes)
  • சூர்யா (4%, 47 Votes)
Total Voters: 1,057

நம்ம எல்லாருக்குமே தெரியும் கடந்த மூணு நாலு வருஷமா நம்மள ஏமாத்தாத தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மூணே பேருதான். முதலாவது சூப்பர் ஸ்டார், ரெண்டாவது சூர்யா அப்புறம் சந்தானம். மத்தவங்க எல்லாருமே நம்ம பீலிங்க்ஸ்சோட வெளயாடுரதையே பொழப்பா வச்சிட்டிருக்காங்க. சிலம்பரசனும், கார்த்தியும் சமீபத்துல நம்மள ஆச்சர்யப்படுத்துனாங்க. அவங்க மட்டுமில்ல நாங்களும் இருக்கம்னு இந்த வருஷம் தலையும் தளபதியும் சொல்லியிருக்காங்க (மங்கத்தாவையும் வேலாயுதத்தையும் தான் சொல்றோம்). இந்த நேரத்துலதான் சூர்யாவோட ஏழாம் அறிவு மாட்டிகிரிச்சு. வாரணம் ஆயிரத்துக்கு அப்புறம் இவரோட தெறமய நிரூபிக்க இந்த படம் தான் வருது. இந்த நேரத்துலதான் நம்ம தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் சூர்யாவுக்கு எதிரா போர்க்கொடி தூக்கியிருக்காங்க. இந்த முக்கியமான சூழ்நிலையில நாம ஒரு பிளாஷ் பாக் போடலாம்னு முடிவு பண்ணியிருக்கம். இது பின்னணி பற்றிய ஒரு அலசல். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிவு. சினிமா பற்றிய பதிவு.[Image]இந்திய சினிமாவுல ரெண்டு வகையான ஹீரோக்கள் இருக்காங்க, ஒன்னு ஆக்டர் இன்னொன்னு ஸ்டார். நம்ம MGR ஒரு ஸ்டார், சிவாஜி ஒரு ஆக்டர். அப்புறம் சூப்பர் ஸ்டார் ஒரு ஸ்டார், உலக நாயகன் ஒரு ஆக்டர். இந்தி சினிமாவுல பாத்தீங்கன்னா ஆமீர் கான் ஒரு ஆக்டர், சல்மான் கான் ஒரு ஸ்டார். இப்பிடி ரெண்டு வேறுபட்ட ஹீரோக்கள் இருந்துக்கிட்டேதான் இருப்பாங்க, அந்த வரிசையில்தான் நம்ம இளையதளபதி ஒரு ஸ்டாராவும் அஜித் குமார் ஒரு ஆக்டாராவும் உருவாகிட்டு வந்தாங்க. படையப்பாவுக்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் குடுத்த வெற்றிடம் தெனாலி தவிர உலக நாயகன் குடுத்த தலைவலி காரணமா தல – தளபதி காம்பினேஷன் சூப்பர் ஹிட் ஆச்சி. அவங்க அவங்க, அவங்க அவங்க வேலைய சரியா செஞ்சிட்டு இருந்தாங்க. இந்த எடத்துலதான் நம்ம சூப்பர் ஸ்டாரோட பாபா படம் வந்திச்சு. யாருமே எதிர்பார்க்காத ஒரு தோல்விய சந்திச்சிச்சு. உடனே தல தளபதில தொடங்கி அதுக்கு அடுத்த தலைமுறையும் ரெடி அப்பிடின்னு நாம நெனச்ச சிம்பு தனுஷ் காம்பினேசன் வரைக்கும் எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் நாற்காலி மேல ஆச வந்திச்சு. இந்த போட்டில எல்லாருமே ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தப்போ இளைய தளபதிதான் ஜெயிச்சாரு. கொஞ்சம் லேட்டவே புரிஞ்சிக்கிட்டாலும் நமக்கு எதுக்கு வீண் வம்புன்னு கொஞ்சம் ஒதுங்கியே இருந்த தலயும் அப்பப்ப ஹிட் குடுத்துக்கிட்டே இருந்தாரு.[Image]இந்த எடத்துலதான் நந்தா படத்துக்கப்புறம் ஒரு நடிகன்குற அந்தஸ்த பெற்ற சூரியாவும் ஒரு ஆர்வத்தில “ஸ்ரீ” அப்பிடின்னு ஒரு படம் நடிச்சாரு, ஊத்திகிச்சு. ஆனா அவரு ஒடனே சுதாகரிச்சிட்டு சைலண்டா அவரோட கேம ஸ்டார்ட் பண்ணினாரு. இவர போலவே விக்ரமும். சூப்பர் ஸ்டார் நாற்காலி போட்டி ஒரு பக்கம் இருக்க இவங்க ரெண்டுபேரும் ஆக்டர் நாற்காலிய குறி வச்சு சைலண்டா முன்னேறிகிட்டே இருந்தாங்க. புதுசு புதுசா கத பண்றது, படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி நடிக்கிறது, அப்பிடி இப்படின்னு ஜமாய்ச்சிக்கிட்டு இருந்தாங்க. ஒருபக்கம் இளையதளபதி சூப்பர் ஹிட் குடுத்துகிட்டு இருந்தாரு, இன்னொரு பக்கம் இவங்க குடுத்துக்கிட்டு இருந்தாங்க. இந்த நேரம் பாத்து நம்ம தல ரேஸ்ல கார் ஓட்ட போயிட்டாரு. இந்த போட்டியில இடையிலேயே விக்ரமும் லேசா ஸ்லிப் ஆக சூர்யா மேல வந்தாரு. பாபா படத்தோட தோல்வி உருவாக்கி விட்ட ஸ்டார் வெற்றிடத்த இளைய தளபதி நிரப்பிகிட்டு இருந்தாலும், நம்ம உலக நாயகன் ஸ்டார் ஆக்டர்ங்கிற மூணாவது வகைய உருவாக்க (அதுதாங்க ஷாருக் கான் வகை) ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தாரு (நீண்ட நாளா உலக நாயகனுக்கு ஸ்டார் கனவு இருந்திச்சி, ஆனா சூப்பர் ஸ்டார் கூட அந்த விசயத்துல போட்டி போடுறது கஷ்டம்குறத நல்லாவே தெரிஞ்சு வச்சிருந்தாரு). நம்ம தலையும் அப்ப அப்ப இதேமாதிரி படங்கள் குடுத்துட்டு இருந்தாரு. இப்பிடியே போய்கிட்டு இருந்தப்போதான் சூப்பர் ஸ்டார் சிவாஜி மூலமா திரும்பி வந்தாரு. சிவாஜி படத்த பாத்திங்கன்னா அதுல வெறும் ஸ்டார் மட்டும் தெரிய மாட்டாரு, ஒரு நடிகனா ரஜினி சாரோட உழைப்பும் தெரியும். (ஒரு ஸ்டார் எப்பிடி நடிச்சாலும் படம் ஓடும்குற மாயையைய பாபா உடைச்சி விட்டுருந்துச்சு). Rajini is Back அப்பிடின்னதும் தளபதி மார்கட் ஆட்டம் காண தொடங்கிச்சு. இதுக்கு சிவாஜி படத்துல ஸ்டார் என்பதை தாண்டி தெரிஞ்ச ரஜனியோட உழைப்பும், படத்துல உள்ள நேர்த்தியும் தளபதி படங்கள்ல மிஸ் ஆனதுதான் முக்கிய காரணம். உலக நாயகனும் சூப்பர் ஸ்டாரும் ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு படம்தான்னு சுருங்கிப்போயிட்டப்புறம் தமிழ் சினிமாவின் முழு அடையாளமும் சூர்யாதான் அப்பிடின்குற ஒரு மாயை உருவாக தொடங்கிச்சு. இதுக்கு வாரணம் ஆயிரம் படமும், இந்தி கஜினியோட வெற்றியும் முக்கிய காரணங்கள். இந்த எடத்துல ஒரு உண்மைய சொல்லி ஆகணும், சூர்யாவோட இந்த முன்னேற்றத்துக்கு எப்படி அவரோட கடின உழைப்பு காரணமோ அதே அளவுக்கு விக்ரம், அஜித், மற்றும் தளபதியோட தோல்விகளும் காரணம்.[Image]இந்த கால கட்டத்துலதான் அயன் அப்பிடின்னு ஒரு பெரிய வெற்றிப்படம் வந்திச்சு. இப்போ சூர்யாவுக்கு இன்னுமொரு பொறுப்பும் வந்திச்சு, அது என்னன்னா எல்லா தரப்பினருக்கும் லாபம் சம்பாதிச்சு குடுக்கற படங்கள் குடுக்கனும்குற பொறுப்புதான் (இதுல பட தயாரிப்பு, விநியோகம் அப்பிடின்னு பிலிம் பிசினெஸ் தொடர்புடைய அரசியல் காரணங்கள் நெறயவும் இருக்கு, அது நமக்கு தேவ இல்லாதது). அது வரைக்கும் அந்த பொறுப்ப ஏத்துகிட்டு இருந்தவுங்க நம்ம சூப்பர் ஸ்டாரும் இளைய தளபதியும்தான். அந்த பொறுப்பு வந்ததும், இவரு ஒரு படம் குடுத்தாரு, ஆதவன் அப்பிடின்னு, அது ஒரு ரவிகுமார் படம். ரவிகுமார் படத்துல நம்ம என்ன எதிர்பார்பமோ அது இருந்திச்சி, ஆனா சூர்யாவுக்கு அது ஒரு பொருத்தமில்லாத படம். ஆக்டரா இருந்த சூரியாவுக்கு ஸ்டார் சாயம் பூசி ஸ்டார்-ஆக்டர் அக்கின படம். தளபதி ரசிகர்களுக்கு சூர்யா மேல கோபம் வாரத்துக்கு காரணமா இருந்த படம். அடுத்தபடம் சிங்கம். படத்துலயும் அவரோட பெர்போர்மான்ஸ் நல்லா இருந்ததால படமும் ஓடிச்சு. தளபதி ரசிகர்கள் இன்னமும் கடுப்பாகிட்டாங்க. இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு புருஞ்சிக்கிட்ட சூர்யா அவரோட பழைய ரூட்டுக்கே திரும்பிட்டாரு. ரத்த சரித்திரம்னு ஒரு படம் பண்ணினாரு, ரிசல்ட் நல்லா வரல . நான் விஜய்க்கு போட்டி இல்லன்னு சொல்ல ரொம்பவே ட்ரை பண்ணியிருந்தாரு. அதோட எழாம் அறிவு, மாற்றான் அப்பிடின்னு ரெண்டு மாறுபட்ட படங்கள் கையில.இப்பதான் நம்ம எந்திரன் சார் வந்தாரு. இந்தப் படத்துல ஒரு நல்லது நடந்திச்சு. எந்திரன் படத்த எடுதிக்கிட்டீங்கன்ன அது ஒரு ஸ்டார் படமே இல்ல, சிவாஜி படத்தைவிட அதிகமானதும் கடினமானதுமான உழைப்ப கொட்டியிருந்தாரு சூப்பர் ஸ்டார். இது சுப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போட்டி போட்டுக்கிட்டுருந்தவங்களுக்கு ஒரு முக்கியமான செய்திய சொல்லிச்சு. அது என்னன்னா, ரஜினியோட கடைசி மூச்சி இருக்க வரைக்கும் யாரும் அந்த நாற்காலிய தொட்டு கூட பாக்க முடியாதுங்குறதுதான். அதோட சேர்த்து, ஒரு குடும்பத்தையோ ஊரையோ நாட்டையோ காப்பத்துற மாதிரி கதைய அமைச்சு பதினாறு மெகா வில்லனையும் இருநூறு கொசுறு வில்லனையும் அடிச்சிட்டு விரல சொடுக்கி தொடைய தட்டி பத்து பதினஞ்சு பஞ்ச் டயலாக் பேசிட்டா மட்டும் சுப்பர் ஸ்டார் ஆகிட முடியாதுன்னும் கத்து குடுத்துச்சி.[Image]இப்பதான் தமிழ் சினிமாவுலையே ரொம்பவும் ஆரோக்யமான ஒரு திருப்பம் வந்திச்சு. சூப்பர் ஸ்டார் பாபா அப்பிடிங்கிற தோல்விக்கப்புறம் எப்பிடி பின்னுதைத்தாரோ (அதாங்க Bounce Back) அதேபோல (கொஞ்சம் லேட் ஆ இருந்தாலும் லேட்டஸ்டா நம்ம தளபதிவும் காவலன்னு ஒரு ஹிட் படம் குடுத்தாரு. விக்ரமுக்கு தெய்வத் திருமகள், தலைக்கு மங்காத்தா ஹிட். அதேபோல வேலாயுதம் ஹிட் . அது மட்டுமில்ல தளபதியோட அடுத்த படம் நண்பன், யோஹன்னு இப்பவே கள கட்டுது. தலைக்கு பில்லா இரண்டாம் பாகம், விக்ரமுக்கு ராஜ பாட்டை, கரிகாலன். இப்ப அந்த தலமுற நடிகர்கள் எல்லாரும் அவங்க அவங்க ரூட் எதுன்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டங்க, இனிமே நிச்சயமா பட்டய கெளப்புவாங்க. இளைய தலமுறைகிட்ட(ஆர்யா, விஷால், ஜீவா அண்ட் கோ) இருந்த இந்த புரிதலும் நட்பும் இப்ப இந்த தலைமுறைகிட்டையும் வந்திருச்சு. கண்டிப்பா இவங்க கிட்ட ஈகோ கிடையாது, ஆரோக்கியமான போட்டி மட்டுமே இருக்கு.[Image]இதுதான் சூர்யாவுக்கு நெசமான சவாலே, இப்ப இவரு ஒரு ஆதவன் நடிச்சாருன்னா நிச்சயமா (Utter Flop) ஊத்திக்கும், அது அவருக்கும் நல்லாவே தெரியும். இனிமே இவருக்கு இன்னொருத்தர் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை, செய்யவும் முடியாது. தல தளபதி மாஸ் முன்னாடி போட்டி போடறதும் ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சு வச்சிருக்காரு. எழாம் அறிவு வேலாயுதத்துக்கு போட்டி இல்ல, மங்காத்தா எழாம் அறிவுக்கு போட்டி இல்ல, இந்த மூணு படமும் வேற வேற ஜோனர், அந்த வகையில மூணுமே பெஸ்ட்டா இருக்கும்குறது நம்ம நம்பிக்கை. ஆனா தொடர் தோல்விகளால துவண்டு போயிருந்த தல-தளபதி ரசிகர்கள் சூர்யா மேல உள்ள கோபத்த தீர்த்துக்க இதத்தான் சரியான தருணமா பாத்துட்டு இருக்காங்க. நம்ம பார்வை என்னனா சூர்யா ஸ்டார்-ஆக்டர்ங்குற இமேஜ விட்டுட்டு ஆக்டர்ங்குற இமேஜ் மட்டுமே உள்ள படங்கள்ல நடிக்கணும். தளபதிதான் ஸ்டார், தலைதான் ஸ்டார் ஆக்டர், சூர்யாதான் ஆக்டர் இந்த கூட்டணி சரியா அமைஞ்சா தமிழ் சினிமாவோட மூணு கான்கள் இவங்கதான் (தூண்கள்னுதானே சொல்லுவாங்க இது என்ன கான்கள்னு யோசிக்காதிங்க, இது சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கான்). அப்ப விக்ரம்ன்னு கேக்குறீங்களா, அவரு அஜய் தேவ்கன். (அப்புறமா நம்ம இளைய தலமுற அதுதாங்க ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், பரத் எல்லாம், ரித்திக் ரோஷன், ஷஹிட் கபூர், இம்ரான் கான், ரான்பீர் கபூர், ஜான் ஆப்ரஹாம், அந்த லிஸ்ட்டு)இவங்க மூணுபேர் படமும் ஜெயிக்கணும் (அதுக்கு அவங்க நல்ல படம் குடுக்கனும்னு சொல்ற ஒங்க மைன்ட் வாயிஸ நாங்க கேட்ச் பண்ணிட்டோம், அதுதான் எங்க ஆதங்கமும் ), அப்பத்தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்லது, அப்புறம் நடிகர்களே ஈகோ எல்லாத்தையும் விட்டுட்டு நடிக்கறாங்க, பழகிக்கறாங்க, ரசிகர்கள் நாம அடிச்சுக்கனுமா? எப்பிடியும் நாம சினிமா ரசிகர்கள்தான், யாரு நல்ல சினிமாவ குடுத்தாலும் ரசிப்பம், முக்கியமான ஒரு விஷயம், நீங்க யாரு ரசிகரா இருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து மறுபடியும் எப்பிடி நடிச்சாலும் இவரு படம் ஓடும்ங்கிற எண்ணத்த மட்டும் யாருக்கும் உருவாக்கி விட்டுறாதீங்க, அப்புறம் நமக்கு சுறாவும், அசலும், ஆதவனும், அருளும்தான் மிஞ்சும். 

No comments:

Post Top Ad

Responsive Ads Here