வேலாயுதம், 7ம் அறிவு எது பெஸ்ட்? 50 th day Report...., - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, December 17, 2011

வேலாயுதம், 7ம் அறிவு எது பெஸ்ட்? 50 th day Report....,



பேக்டரிய டெவெலப் பண்ணுனதில் இருந்து வெண்ணை வேணும் பண்ணு வேணும்னு காலங்காத்தால வந்துடுரானுங்க.
அதே மாதிரி ஏழாம் அறிவு படம் ரிலீஸ் ஆனாலும் ஆச்சு ரிவியு, கமெண்ட், பதிவுன்னு ஆளாளுக்கு எழுத ஆரம்பிச்சுட்டாங்க.நம்ம பங்குக்கு நாமளும் எதாச்சும் எழுதலேன்னா இந்த பதிவுலகம் நம்மள மன்னிக்காது.
அதனால இந்த பதிவு.ஏழாம் அறிவு படம் வெற்றி தான் ஆனால் தோல்வி….அது எப்படி வெற்றிப்படம் தோல்வி ஆகும். ஆபரேஷன் சக்சஸ் பேசன்ட் ஃபெய்லியர் மாதிரி தான்.ஒரு நல்ல நடிகர், திறமையான இயக்குனர், திறமையான மியூசிக் டைரெக்டர், உலகத்தரம் வாய்ந்த வில்லன், சிறந்த பப்ளிசிட்டி, இதற்கு மேலாக சிறந்த கதை அம்சம் கொண்ட ஒரு படம்தான் ஏழாம் அறிவு.நம்ம தளபதி விஜய் படம் வேலாயுதம் பட்ஜெட் 45 கோடி ரூபாய் இந்த படம் 100 கோடி ரூபாய் கலெக்சன் செய்திருக்கிறது.
இதிலிருந்து பார்த்தால் ஏழாம் அறிவு தோல்வி படமே.அதற்கு மேலாக ஏழாம் அறிவு படத்தின் பட்ஜெட் 85 கோடி ரூபாய்.இந்த படத்தின் ப்ரொடக்சன் கோஸ்ட் 110 கோடி . இப்பொழுதான் இந்த படம் 90 கோடி ரூபாய் கலெக்சன் செய்திருக்கிறது. இனி எப்பொழுது லாபம் பார்ப்பது?ஏழாம் அறிவு மக்கள் மத்தியில் வெற்றி அனால் தயரிப்பாரளுக்கோ, சுர்யாவுக்கோ தோல்வி படம் தான்.

ஏழாம் அறிவு தோல்வியின் ஏழு காரணங்கள்


ிச்சயம் ஒரு வித்யாசமான கதை களம். இத்தகைய வித்யாசமான கதைகள் வருவதே அரிது தான். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் வரவேற்கபட வேண்டிய ஒன்று.

சூர்யாவின் அர்ப்பணிப்பு போதி தர்மரில் நன்கு தெரிகிறது. உடலை (6 packs!!) என்னமாய் வைத்திருக்கிறார் !! ஆனால் சர்க்கஸ் கலைஞராக முதல் பாடலில் மட்டும் தான் கொஞ்சமாக ஏதோ செய்கிறார். அதன் பின் டென்ட் அருகே தான் சூர்யாவை பார்க்க முடிகிறது சர்க்கஸ் உள்ளே அல்ல.

ஸ்ருதி போட்டோக்களில் பார்க்கும் போது எனக்கு அவ்வளவாக ஈர்க்க வில்லை. அவரது அம்மா சரிகாவை பார்க்கிற மாதிரியே இருந்தது. ஆனால் படத்தில் நன்கு நடித்துள்ளார். சொல்ல போனால் படத்தில் அதிகம் பேசுவது இவர் தான். நடுவில் வரும் இரண்டு மணி நேரத்திற்கு சூர்யாவை விட இவருக்கே அதிக வாய்ப்பு. ஒரு சில இடங்களில் தமிழ் சற்று இடறினாலும் பெருமளவு சரியாக செய்துள்ளார். நல்லதோர் புது வரவு.

யம்மா யம்மா, இன்னும் என்ன தோழா உள்ளிட்ட பாடல்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜுக்கு பாராட்டு. ஆனால் சில பாடல்கள் காப்பி அடித்தது ஏனோ?

இனி படம் சறுக்கியது எங்கே என பார்ப்போம்:

படம் துவங்கியதும் பின்னணியில் ஒலிக்கிற குரல் இருக்கிறதே ! எங்கிருந்து தான் பிடித்தார்களோ? “பீகாரில் வெள்ளம்” என முன்பெல்லாம் திரை அரங்குகளில் படம் துவங்கு முன் நியூஸ் ரீல் ஓட்டுவார்கள். அதே மாதிரி குரல் உள்ள நபரை கூட்டி வந்து, அதே தொனியில் பேச வைத்திருக்கிறார்கள். இது அந்த காலத்து டாக்குமெண்டரி பார்க்கும் உணர்வையே தருகிறது. போதி தர்மருக்காக உழைத்த அவ்வளவு உழைப்பையும் இந்த குரலால் கெடுத்து விட்டார்கள். அதிலும் அந்த குரல் அதே தொனியில் முதல் இருபது நிமிடமும் பேசி கொண்டே இருக்கிறது.

போதி தர்மர் போர்ஷன் முதலில் வந்திருக்க கூடாது. அவர் பற்றி எதிர்பார்ப்பை ஏற்றி சென்று பின்னர், பிளாஷ் பேக் ஆக வந்திருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பின்னணி குரல் சூர்யா அல்லது ஸ்ருதி பேசியிருக்கலாம்.

முதலில் தான் போதி தர்மர் போர்ஷன் வரணும் என்றால் கமல், பார்த்திபன் போன்ற நமக்கு தெரிந்த குரலில் யாரையாவது பேச வைத்திருக்கலாம். This is a big let down.

அடுத்து என்னை வெறுக்கடித்தது வில்லன் குறித்த பகுதிகள். அவர் ஒரு சில வினாடி பார்த்தாலே அனைவரும் அவரது கண்ட்ரோலில் வருவார்கள் என்பது மிக பெரிய ரீல். அதுவும் ஒரு நிமிடத்தில் பத்து பதினைந்து பேர் அவர் பார்த்ததுமே அவர் “நினைக்கிற மாதிரி” செய்வதெல்லாம் சாரி ரொம்ப ஓவர். ஹிப்னாடிசம் பற்றி அனைவரும் அறிந்த விஷயம் ஒருவரை ஹிப்னாடிஸ் செய்ய குறைந்தது ஓரிரு நிமிடங்கள் ஆகும் என்பது !! இப்படியா ஓவராக காண்பிப்பது?

க்ளைமாக்ஸ் தவிர்த்து ஹீரோ அரவிந்துக்கு (சூர்யா) பாட்டு பாடுவதையும் ஸ்ருதி வண்டி பின்னே உட்கார்ந்து போவதையும் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. படம் முழுதும் வில்லனின் டாமினேஷன் தான். இப்படி ஹீரோவை முக்கால் வாசி படம் டம்மி ஆக்கியது சாதாரண ரசிகனுக்கு எப்படி ஏற்புடையதாகும் என தெரிய வில்லை.

இறுதியாக படக்குழுவினர் இந்த படத்துக்கு தந்த பேட்டிகளும், ஓவர் பில்ட் அப்பும் தான் நிறைய எதிர் மறை விமர்சனங்கள் வர காரணமாக அமைந்து விட்டது.

இவ்வளவு குறைகள் கூறினாலும் கூட ஏழாம் அறிவு தவிர்க்க பட வேண்டிய படம் அல்ல. வித்யாசமான கதை களம் என்பதால் ஒரு முறை பார்க்க கூடிய படம் என்று தான் சொல்ல வேண்டும்



1 comment:

srivignesh said...

how dare did u say that the 7am arivu is aflop movie did u have eye did u have ear then see 7 am arivu and velayudam and say which is the best

Post Top Ad

Responsive Ads Here