ஆமாம் மகா ஜனங்களே தானுண்டு தனது நடிப்புண்டு என்று அமைதியாக இருக்கும் விஜய் அதிரடியாக தயாரிப்பிலும் தடம் பதிக்கப் போகிறாராம். முதல்கட்டமாக தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் ரெடி, கில்லி ஃபிலிம்ஸ்.
எப்படி பெயர் அப்படியே ஜிவ்வுன்னு இருக்கிறதா? தயாரிக்கப் போகும் படங்களும் அப்படி இருக்கணும் என்பதுதான் இளைய தளபதியின் ஆசை. அதற்கு சரியான தொடக்கத்தை அவரே முடிவு செய்திருக்கிறார்.
விஜயகாந்துக்கு அஸ்திவாரமாகவும், திருப்புமுனையாகவும் இருந்த படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்தப் படத்தைததான் முதலில் கில்லி ஃபிலிம்ஸ் சார்பில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படம் என்பதால் உரிமைப் பிரச்சனை இல்லை. நடிக்கப் போவது யார் என்பதுதான் தெரியவில்லை.
No comments:
Post a Comment