ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பாட்டு ஒன்று பாட இருக்கிறாராம் நடிகர் விஜய். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தபடத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான்.
இப்போது புதிய செய்தி என்னவென்றால், யோகன் அத்தியாயம் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாட இருப்பது தான். விஜய்க்கு பாட்டு பாடுவது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே நிறைய படங்களில் பாடியுள்ளார். இப்போது கூட தான் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் அசத்தலான பாட்டு ஒன்று பாடியிருக்கிறார். அதனால் விஜய்-ஏ.ஆர்.ரஹ்மானின் காம்பினேஷன் எப்படி இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது
No comments:
Post a Comment