இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் திரைப்படம் ”யோஹன் – அத்யாயம் ஒன்று”. இதில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார்.துப்பாக்கி திரைப்பட படப்பிடிப்பு நிறைவு பெற்றதும், ”யோஹன்” படப்பிடிப்புக்கான கால்சீட்டை விஜய் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டியளித்த இயக்குனர் கௌதம் மெனன், ”யோஹன்” திரைப்படத்துக்கான கதை வசனம் தயாராகி விட்டதாகவும், விஜய் இன் ”துப்பக்கி” படப்பிடிப்பு நிறைவுபெற்றதும், ”யோஹன்” படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.
யோஹன் படத்தில் நடிக்கும் ஒரே தமிழன் விஜய் எனவும், கதாநாயகி இந்திய பெண் என்றும், ஏனைய நடிகர் நடிகைகள் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இப் படம் சர்வதேச தரத்துக்கு ஈடாக தயாரிக்கப்பட இருப்பதாகவும், ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இப்படத்துக்கு AR ரஹுமான் இசையமைக்க உள்ளதாக தெரிவித்தார்.
யோஹன் திரைப்படம், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் போல பாகம்1,2,3,….. என பல பாகங்களாக எடுக்கப்பட உள்தாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment