சினிமாவிற்கு தான் அஜித்தும், நானும் நீயா-நானா...? என்று போட்டி போடுவோம் மற்றபடி நாங்கள், நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். பல்வேறு தடைகளை கடந்து இன்று, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கும் நடிகர் விஜய், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பொதுவாக எல்லா ஹீரோக்களும் ரொமான்ட்டிக்கில் இருந்து அதிரடிக்கு மாறுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படியே மாறியிருக்கிறது. எனது சினிமா கேரியரில் இடைப்பட்ட காலத்தில் தான் ரொமான்ட்டிக் ரோலில் நடித்து, இப்போது ஆக்ஷ்ன் ஹீரோவாக மாறியிருக்கிறேன். எனக்கு காமெடி கலந்த ரொமான்ஸ் காட்சியில் தான் நடிக்க ஆசை, ஆனால் இன்றைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கமர்ஷியலில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
மேலும் சினிமாவில் தனக்கு யார் போட்டி என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய், ரஜினி-கமல் ஆகியோரைத் தொடர்ந்து எனக்கும், அஜித்துக்கும் போட்டி என்று பலரும் கூறுகிறார்கள். சினிமாவை பொறுத்த வரைக்கும் அஜித்துக்கும், எனக்கும் நீயா - நானா...? என்று போட்டி நடக்கும், மற்றபடி நானும் அஜித்தும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வோம். நான் அவருடைய வீட்டிற்கும், அவர் என்னுடைய வீட்டிற்கும் வருவது உண்டு. எங்களைப் போலவே எங்கள் இருவரது குழந்தைகளும் நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். சினிமாவில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லது தானே.
தற்போது முருகதாஸின் துப்பாக்கியில் நடித்து வருகிறேன். அருமையான ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் கதை. முருகதாஸ் ரொம்ப திறமையானவர், அவர் ஒரு குட்டி மணிரத்னம். அதேபோல் படத்தின் நாயகி காஜல் அகர்வாலும் நல்ல பொருத்தம். வில்லனாக வித்யூத் ஜமால் நடித்துள்ளார். அவரை வில்லன் என்று சொல்லுவதை விட, ஹீரோ என்றே சொல்லலாம். துப்பாக்கி படத்திற்கு அடுத்தப்படியாக கவுதம் மேனனின், யோஹன் அத்தியாயம் ஒன்று படத்திலும், அதற்கு அடுத்து விஜய் டைரக்ஷ்னில் ஒரு படத்திலும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment