பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்க இருப்பதாக விஜய் அறிவித்துள்ளார்.
விஜய் ரசிகர்கள் அவரைப்பற்றிய பாடல்களை, ‘தளபதி ஆன்தம்’ என்ற பெயரில் வீடியோ ஆல்பமாக உருவாக்கி, யு டியூப்பில் வெளியிட்டுள்ளனர்.
இதை சி.டியாக வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விஜய் வெளியிட, சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்ந்த ராஜா பெற்றார். ஆல்பத்தில் பங்கேற்ற வல்சன், தினேஷ், இயக்குனர் கோகுல், சங்கிலி முருகன் கலந்துகொண்டனர். பிறகு விஜய் பேசியதாவது:
ரசிகர்களை எப்போதுமே என் நண்பர்களாகத்தான் பார்க்கிறேன். நான் சொல்லாமலே, அந்தந்த மாவட்டங்களில் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்கின்றனர். சமீபத்தில் எனது மக்கள் இயக்கம் சார்பில், மும்பையில் பல நிகழ்ச்சிகள் நடத்தி, நற்பணிகள் செய்தனர். இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன்.
தமிழக அளவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை கவுரவப்படுத்தும் விதமாக, அவர்களை ஒருநாள் முழுவதும் என்னுடன் தங்க வைத்து விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளேன். அவர்களுக்கு பரிசு வழங்கவும் முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு விஜய் பேசினார்.
No comments:
Post a Comment