சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் பிரவுதேவா இயக்கி வரும் இந்தி படம் ரவுடி ரத்தோர். நம்ம கார்த்தி நடித்த சிறுத்தையின் ரீமேக். இதில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர்.
இதில் ஒரு பாடலுக்கு இளைய தளபதி விஜய் நச்சுன்னு ஆடியுள்ளார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டோம்.ஆனால் கோலிவுட்டில் பெரிய ஹீரோவான விஜயை எப்படி ஒரு பாட்டுக்கு வந்து ஆடுங்க என்று சொல்வது என்று பிரபுதேவா முதலில் தயங்கினாராம்.
பிறகு சரி கேட்டுத் தான் பார்ப்போம் என்று விஜயிடம் கேட்டுள்ளார். பிரபுதேவா சற்றும் எதிர்பாராவிதமாக ஓ.கே. சொன்ன விஜய் அடுத்த 1 மணி நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிட்டாராம்.
விஜயை பார்த்தவுடன் படத்தின் ஹீரோ அக்ஷய்க்கு ஒரே ஆச்சரியமாம். உடனே வந்து விஜயை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு பிரபுதேவாவைப் பார்த்து விஜயக்கு என்ன 17 வயசா என்று அக்ஷய் கேட்டுள்ளார்.
இது குறித்து பிரபுதேவா கூறுகையில், இந்த பாடல் மூலம் விஜயை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய முயற்சிக்கவில்லை. அவரை யாரும் பாலிவுட்டுக்கு சிபாரிசு செய்யத் தேவையில்லை. பாலிவுட்டே அவரை வரவேற்கும் என்றார்.
No comments:
Post a Comment