ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு பெஸ்ட் சாய்ஸ் வெற்றி பெற்ற படங்களின் ரீமேக் தான் என்பதை கோடம்பாக்கம் நன்கு அறிந்திருக்கிறது. ரஜினியின் பில்லா ரீமேக் சக்சஸ், பில்லா 2 ரீமேக் வரை இழுத்துச் சென்றுள்ளது.
இந்த வரிசையில் விஜய்யின் கில்லி பில்ம்ஸ் முதல் தயாரிப்பும் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் தான். அடுத்ததும் ரீமேக் படம் தான் என்கிறது விஜய்க்கு நெருங்கிய வட்டாரம்.
மேலும், ரஜினியின் அண்ணாமலை படத்தின் ரீமேக்தான் விஜய்யின் அடுத்த சாய்சாக இருக்கிறது. இதற்காக ரஜினியை நேரில் சந்தித்து தனது ஆசையை நிறைவேற்றும்படி கேட்கப் போகிறாராம் விஜய். இப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இப்படத்தில் ஹன்சிகா இருக்க வேண்டும் என்பதை மட்டும் இப்பவே முடிவு செய்துவிட்டார் விஜய் என்கிறது விவரமறிந்த வட்டாரம். அப்புறம் என்ன மீண்டும் கொண்டையில் தாழம்பூ..பாட்டு களை கட்டும் தானே!!
No comments:
Post a Comment