வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றம் சார்பில் சத்துவாச்சாரி ரங்காபுரம் கிஷ்ணா திருமண மண்டபத்தில் நாளை 19-ந் தேதி 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். அவரது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்கொள்கின்றனர்.
திருமணம் முடிந்ததும் 11 ஜோடிகளுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்களை விஜய் வழங்குகிறார். இதனையடுத்து மணமக்கள் குடும்பத்துடன் விஜய் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.
திருமணத்தில் மக்கள் இயக்கம் மாநில பொருப்பாளர் ஆனந்த் செயலாளர் ரவிராஜா, வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் வேலூர் மாவட்ட மக்கள் இயக்கம், ரசிகர் மன்ற நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
விஜய் வருவதையொட்டி அவரது ரசிகர்கள் வேலூர், காட்பாடி பகுதிகளில் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். திருமணம் நடைபெறும் ரங்காபுரம் பகுதியில் மக்கள் இயக்க கொடி தோரணங்கள் கட்டி உள்ளனர். இதனால் வேலூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. நடிகர் விஜய்க்கு மேளதாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்
No comments:
Post a Comment