இளையதளபதி விஜய்க்கு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்த்திலும் பல ரசிகர் மன்றங்கள் உள்ளன.
விஜய் ரசிகர்கள் இந்த ரசிகர் மன்றங்கள் மூலமாக மக்களுக்கு பலவித நற்பணிகளை செய்து வருகிறார்.
விஜய் ரசிகர்கள் இந்த ரசிகர் மன்றங்கள் மூலமாக மக்களுக்கு பலவித நற்பணிகளை செய்து வருகிறார்.
குறிப்பாக விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் அணிவிப்பது, மாணவர்களுக்கு கல்வி உதவி, ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் போன்ற பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார்கள்.
ரசிகர்கள் செய்யும் நற்பணிகள் தொடர்ந்து நடைபெறவும், அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்குடனும் நடிகர் விஜய் அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து பிரியாணி விருந்து வழங்கினார்.
மேலும் சிறப்பாக செயற்பட்ட நிர்வாகிகளுக்கு மோதிரம், செயின் போன்ற பரிசுப் பொருட்களை வழங்கியதோடு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
அடுத்த வருடமும் வித்தியாசமான முறையில் நற்பணி செய்யும் நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment