ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் துப்பாக்கி. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான துப்பாக்கி படத்திற்கு கள்ள துப்பாக்கி படத்தினருடன் டைட்டில் பிரச்சினை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பல்வேறு காரணங்களால் நிலுவையிலேயே இருந்து வருகிறது.
செப்டம்பர் 10-ஆம் தேதியன்று வழக்கு விசாரனைக்கு வரும் போது எப்படியும் இந்த வழக்கை முடித்துவிட்டு தீபாவளியன்று ‘துப்பாக்கி’ படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்ற முடிவில் துப்பாக்கி படக்குழு இருப்பதாக தெரிகிறது.
துப்பாக்கி படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதத்தின் 3 அல்லது 4-வது வாரத்தில் நடக்கும் என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். துப்பாக்கி படத்தின் டிரெய்லரும் இசை வெளியீட்டு விழாவிலேயே வெளியிடப்படுமாம். துப்பாக்கி படத்தின் டைட்டிலும், லோகோவும் மாற்றப்படுமா? என்பது தான் கோடம்பாக்கத்தில் இப்போதைய பரபரப்பான பேச்சாக உள்ளது. இந்நிலையில் துப்பாக்கி படத்தின் கர்நாடக விநியோக உரிமையை, விநியோகிஸ்தர் ஸ்ரீகாந்த் வாங்கியுள்ளார்.
அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட 4 தமிழ் படங்களில் துப்பாக்கியும் ஒன்று. அக்டோபர் 12-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘மாற்றான்’ படத்தையும் ஸ்ரீகாந்த வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகை அக்ஷரா கௌதா தனது டுவிட்டர் இணையதளத்தில் “ இரண்டு பாடல்களில் விஜய் கடினமான ஸ்டெப்களை போட்டுள்ளார். அந்த நடனத்தை பார்த்து ரசிகர்கள் கண்டிப்பாக ஆச்சர்யத்தில் மூழ்கிப் போவார்கள்” என்று கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment