படத் தலைப்பு குறித்து கோர்ட்டில் பஞ்சாயத்து ஒருபக்கம் நடந்தாலும் கூட படத்திற்கான எதிர்பார்ப்பில் சற்றும் தொய்வில்லை. இப்போது தெலுங்கு விநியோக உரிமையை பெரும் தொகைக்கு விற்றுள்ளனராம்.
விஜய் படங்களிலேயே தெலுங்கு விநியோக உரிமை அதிகம் போன படமாக துப்பாக்கி உருவெடுத்துள்ளதாம். துப்பாக்கியை தெலுங்கில் வெளியிட ரூ. 15 கோடிக்கு விலை பேசி விற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு பெரிய விலைக்கு அந்தப் படத்தை வாங்கக் காரணம், படத்தின் நாயகி காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் இருக்கும் கிராக்கிதானாம். மற்றபடி விஜய்க்காக இப்படத்தை ஷோபா ராணி வாங்கவில்லையாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா ஆகியோர் நடித்த படங்களின் விநியோக உரிமைதான் வழக்கமாக அதிக விலைக்குப் போகும். இந்த நிலையில் விஜய்யும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
துப்பாக்கி தெலுங்கு விநியோக உரிமையை வாங்க பிலம்கொண்டா சுரேஷின் சாய் கணேஷ் தயாரிப்பு நிறுவனம், அல்லு அரவிந்த்தின் கீதா பிலீம்ஸ், சுரேஷ் பாபுவின் சுரேஷ் பிலிம்ஸ் ஆகிய பெரும் பட நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியதாம். இருப்பினும் ஷோபா ராணியின் எஸ்விஆர் மீடியா நிறுவனம் டப்பிங் உரிமையை வாங்கி விட்டதாம்.
துப்பாக்கி படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
சரி, இந்த ஷோபா ராணி யார் என்று தெரிகிறதா?.. சில வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் ராஜுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டாரே அவரேதான்...!!
No comments:
Post a Comment