மாற்றான் அக்டோபர் 12ல் வெளியாவதால் துப்பாக்கிக்கு போட்டி ஏதும் இல்லாமல் தீபாவளிக்கு வசூலை அள்ளலாம் என்று இருந்தார்கள். வரும் பத்தாம் திகதி நீதிமன்றத்தில் சாதகமாக செய்திகள் எதுவும் இல்லை என்றாலும் படத்தின் தலைப்பை மாற்றியாவது படத்தை வெளியிடுவது என்பதில் தற்பொழுது முருகதாஸ் உறுதியாக உள்ளார்.
இப்பொழுது திடீரென்று களத்தில் குதித்துள்ளது கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன். ஸ்டுடியோ கிரீன் படத்தை வெளியிடுகிறது. இப்படித்தான் அஜித் நடித்த பில்லா படத்திற்கும் திடீரென்று சகுனி படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தினர். இதனால் பில்லா சில வாரங்கள் கழித்தே வெளியிடும் சூழல் ஏற்பட்டது.
விஜய்யின் வேலாயுதத்துடன் சூர்யாவின் ஏழாம் அறிவு வெளியாகியது. நண்பனுடன் மோத தயாரான சகுனியை சில கடைசி நிமிட சட்டங்களை இயற்றி எஸ்.ஏ.சந்திரசேகர், சில மாதங்கள் தள்ளிப் போக வைத்தார். ஆனால் இந்த முறை ஒரு கை பார்த்து விடுவது என களத்தில் மும்முரமாக வேலை செய்கிறார்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தினர்.
2 comments:
dai yantha magan padam vanthalum vijay thanda top
otha vaangada anna ah adichu anupnathu pathaathunu thammbiyum varaan va da vaaaaaaaaaa
ilayathalabathy da vaaaaa
Post a Comment