துப்பாக்கி இது தான் இளைய தளபதி விஜய்யின் தம்பிகள் அனைவரின் நினைவிலும் கனவிலும் வந்து கொண்டிருக்கும் பெயர். இதன் ஒவொரு சிறிய செய்தியும் பெரிய அளவில் எதிர் கொள்ளப் படுகிறது. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே இவளவு பெரிய எதிர்பார்ப்பை ரோபோவிற்கு பின்னர் இப்போது தான் பார்க்கிறோம். விகடன் இணையத் தளத்தில் நடந்த கருத்துக் கணிப்பு ஒன்றில் வர இருக்கும் படங்களில் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப் படும் படமாக துப்பாக்கி உள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் துப்பாக்கியுடன் போட்டி போட்ட படங்கள் ரஜனியின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம், விஷ்ணுவர்தன் – அஜீத்தின் புதிய படம், போடா போடி, ஆதிபகவன் போன்றனவாகும்.
இந்தப் படத்தில் நடித்தான் பின்னர் இயக்குநர் ஏஆர் முருகதாசும் விஜய்யும் ஒருவரை ஒருவர் நன்கு பாராட்டி உள்ளார்கள். ரொம்ப ரொம்ப டேலண்ட்டான, அப்டேட்டட் நாலெட்ஜ் உள்ளவர் முருகதாஸ். இந்த படமும் ரொம்ப ரொம்ப அழகா நான் நெனைச்ச மாதிரியே வந்திருக்கு. இது எனது கனவுப் படம்… ஏ ஆர் முருகதாஸுக்கு நான் ஒரு செல்லப் பெயர் வைத்துள்ளேன். அவர் ஒரு குட்டி மணிரத்னம்,என்று விஜய்யும், நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த நாட்களிலேயே விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று அவரிடம் கூறிக்கொண்டு இருந்தேன். அவருடைய டயலாக் டெலிவரி டைமிங், அவரது நடனம், அவரது கடின உழைப்பு எனக்கு பிடிக்கும் இப்போதுதான், அவரை டைரக்ட் பண்ண சான்ஸ் கிடைத்து என்று முருகதாசும் கூறி உள்ளனர்.
துப்பாக்கியில் விஜய்யின் கேரக்டர், மும்பையில் செட்டிலாகிவிட்ட ஒரு ராணுவ அதிகாரி என்பதால், படத்தில் சில வாக்கியங்கள் விஜய் ஹிந்தி பேசுவதாக வருகிறது. பக்கா மும்பைவாலாக்களின் ஆக்சென்டில் உள்ளது விஜய்யின் ஹிந்தி உச்சரிப்பு என்கிறார் முருகதாஸ்.
படத்தின் பாடல்களோ சாதனைகள் படைக்கத் தொடங்கி விட்டன. பட்டி தொட்டி எங்கும் துப்பாக்கி பாடல்கள் தான். மதன் கார்க்கி எழுதி இளைய தளபதி பாடியுள்ள கூகுள் கூகுள் தன் பாடல்களிலே ஹைலைட். பட முன்னோட்டம் யூ டியுப்இல் கிட்டத் தட்ட இரண்டு மில்லியன் பார்வையீடுகளைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
துப்பாக்கியுடன் தீபாவளிக்கு போட்டி போடும் என்று எதிர் பார்த்த பெரிய படங்கள் அனைத்தும் பின் வாங்கி விட்டன, தற்போது நல்ல மார்க்கெட் வைத்திருக்கும் சூர்யாவே ஒதுங்கிய போதே துப்பாக்கி எப்படி வந்திருகின்றது என்பது தெரிந்திருக்கும்.
இளைய தளபதி விஜய் தனியாக வந்தாலே அந்தப் பட ஒபெனிங் சூப்பர் ஸ்டாருக்கே சவால் விடும். இப்போ டபுள் பரல் துப்பாக்கி முருகதாசுடன் சேர்ந்து வருகின்றது. என்னென்ன சாதனைகள் உடைக்கப் படப் போகின்றதோ, படைக்கப் படப் போகின்றதோ?
துப்பாக்கியின் சாதனை அடுத்த ரஜனியின் படம் மட்டும் தான் நினைக்க வேண்டிய அளவில் இருக்கப் போவது உறுதி.
No comments:
Post a Comment