இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தின் கதாநாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமந்தாவின் கால்சீட் கிடைக்காததால் காத்திருந்து களைத்துப் போன ஏ.எல்.விஜய் தனது ஆஸ்தான நாயகியான அமலா பாலை இளையதளபதியின் கதாநாயகியாக்கி விட்டார். இந்தப் படத்தை தயாரிப்பது சந்திரபிரகாஷ் ஜெயின். இசை ஜி.வி.பிரகாஷ்.
தாண்டவம் படத்தில் பலத்த தோல்வியை சந்தித்துள்ள ஏ.எல்.விஜய் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்பொழுது விஜய் கையில் இருப்பதால் வெற்றி நிச்சயம். இருந்தாலும் தாண்டவம் தந்த படிப்பினால் தனது திரைக்கதையை உதவியாளர்களை வைத்து மெருகேற்றிக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment