இளைய தளபதி நடித்துள்ள துப்பாக்கி வெளியாகவிருக்கும் நிலையில் படத்திற்கான செலவு விபரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகத்தினர், பொதுவாகவே தனது மகன் நடிக்கும் படங்கள் எதுவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சம்பளம் பேசி அதற்கு மேலும் ஒரு பெரும் தொகையை வாங்கிவிடுவாராம்.
திரையுலகத்தினர், பொதுவாகவே தனது மகன் நடிக்கும் படங்கள் எதுவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சம்பளம் பேசி அதற்கு மேலும் ஒரு பெரும் தொகையை வாங்கிவிடுவாராம்.
இது தனது கொமிஷன் என்று அவர் கூறிக் கொள்வதாக கூறுகிறார்கள்.
இதுபோக, பாக்கெட் மணி என்று சுமார் ஒரு கோடி வரை வாங்கிக் கொள்வாராம் துப்பாக்கி நாயகன்.
இப்படியே அவர்களுடைய குடும்பத்திற்கு மட்டும் ஆறு கோடியை வாரி இறைத்ததாம் படத்தை தயாரித்திருக்கும் ஜெமினி நிறுவனம்.
படத்தின் உண்மையான தயாரிப்பாளர்கள் இவர்கள்தான். அப்படியென்றால் தாணு? அவர் இந்த படத்தை பொறுத்தவரை காஸ்ட்டிலியான தயாரிப்பு நிர்வாகி மட்டுமே என்கிறார்கள்.
இதற்காக ஐந்து கோடிவரை தனி சம்பளம் பெற்றிருக்கிறாராம் தாணு.
விஜய் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரோ, அவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.
அதாவது இருவருக்கும் தனித்தனியாக பதினைந்து கோடி. இந்த செலவுகளை கூட்டினாலே சுமார் நாற்பத்தியாரு கோடி ரூபாய் ஆகிவிடுகிறது.
இதுபோக ஹாரிஸ் ஜெயராஜுக்கு நான்கு கோடி சம்பளம். காஜல் அகர்வாலுக்கு ஒரு கோடி. இப்படி கூட்டிக்கழித்தால் அதுவே ஐம்பது கோடியை நெருங்குகிறது.
இப்படி நெல் விதைக்கும் முன்பே வேலையாட்களுக்கு சம்பளத்தை வாரி இரைத்திருக்கிறது ஜெமினி.
அதற்கப்புறம் விதைத்து… உரம் போட்டு… அறுவடை செய்தால் தான் லாபமா? நட்டமா என ஜெமினி நிறுவனத்திற்கு தெரியவரும்.
No comments:
Post a Comment