இந்த தீபாவளி விஜய்க்கு விசேஷ தீபாவளியாக இருக்கப் போகிறது. அண்ணாச்சிக்குஇருக்கிற நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் அவர் நேரடியாக பாலிவுட்டுக்கு போயிருக்கலாம் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், விழி பிதுங்க வைக்கும் மொழி பிரச்சனைக்காகவே அஞ்சி அந்த தடபுடல் தாண்டவத்தை ரசிக்கவில்லை விஜய். ஆனால் அவரே விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டத்தின் கதவை படீரென திறந்து விட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
கஜினி படத்தின் மூலம் பாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்ட முருகதாஸ் அதன்பின் என்ன காரணத்தாலோ இந்திப்பட வாய்ப்புகளை தள்ளிப் போட்டு வருகிறார். இந்த துப்பாக்கியை அப்படியே பாலிவுட்டில் ரிலீஸ் செய்து ஒரே கல்லில் ரெண்டு மாம்பழத்தை அடிக்க போகிறாராம் கலைப்புலி தாணு.
மும்பை ஏரியாவில் சுமார் 100 தியேட்டர்களை புக் பண்ணியிருக்கிறார். மும்பை தமிழர்களுக்கும் இது விசேஷ தீபாவளியாக இருக்கும்.
No comments:
Post a Comment