துப்பாக்கி இந்த வருடத்தின் மிகப் பெரிய படம். இந்த வருடத்தின் என்று கூறுவதில் ஒரு பெரிய விடயம் இருக்கிறது. மற்றைய வருடங்களைப் போல் அல்லாது இந்த வருடம் தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்கள் அனைவரும் எதாவது ஒரு படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ரஜனியின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா 2 சூர்யாவின் மாற்றான் விக்ரமின் தாண்டவம் மணிரத்னத்தின் கடல் ஷங்கரின் ஐ இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். இது வரை எடுக்கப் பட்ட எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இந்தப் படங்களை எல்லாம் புறம் தள்ளிமுதலாம் இடத்தைப் பிடித்துள்ளது இளையதளபதியின் துப்பாக்கி தான். இது பற்றி ஏற்கனவே துப்பாக்கி சுனாமி எச்சரிக்கை செய்தியில் சொல்லியிருந்தோம். இது தற்போது வரை நவம்பர் 9ம் திகதி வெளிவருவதற்கான ஏற்பாடுகள் தான் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே இன்றிலிருந்து 9 நாட்கள் தான் இருக்கின்றது. இதனை முன்னிட்டு மயூர்.காம் ஆரம்பித்த கவுன்ட்டவுன் தான் இது. இதில் இது வரை துப்பாக்கி பற்றி வந்த வராத செய்திகள் தொகுத்து அளிக்கப் பட இருக்கிறது.
துப்பாக்கியின் பெயரே ஒரு பெரிய போராட்டத்தின் பின்னர் தான் உறுதியாகியிருக்கிறது. கள்ளத் துப்பாக்கி என்னும் பெயரை முன்னரே பதிவு செய்திருந்ததாக கூறி அந்தப்படத் தயாரிப்பாளர்கள் பிரச்சினை கிளப்பினார்கள். இதுவும் துப்பாக்கிக்கு கிடைத்த மற்றும் ஒரு பெரிய விளம்பரம். துப்பாக்கி பெயர் கிடைக்காது என்று நினைத்து அதற்கு வேறு பெயர் என்ன வரும் என்று கூட நிறையப் பத்திரிகைகள் தலையைப் பிய்த்துக்கொண்டும் வாசகர்களை பிய்க்க வைத்துக்கொண்டும் இருந்தன. சரவெடி, மும்பை தமிழன் இன்னும் என்னன்னவோ! இறுதியில் ஏ ஆர் முருகதாசின் பிடிவாதத்தாலும் இளைய தளபதி, தாணுவின் சாதுர்யத்தாலும் தலைப்பு தக்க வைத்துக் கொள்ளப்பட்டது.
நேற்றைய எழுத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிற்கு இளையதளபதி விஜய் செய்த உதவியைப் பற்றி சொல்லி இருந்தோம். இது பற்றி இளையதளபதி விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் சொன்னது என்னவென்றால் இது இளையதளபதி விஜய்யின் முதல் முறையல்ல பலமுறை பல தயாரிப்பாளர்களுக்கு இந்த உதவி செய்யப்பட்டிருக்கிறது. அதனை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லப்பட்டிருந்ததால் வெளியில் வரவில்லை. ஆனால் இம்முறை கலைப்புலி தாணு அவர்கள் உத்தரவையும் மீறி வெளியில் சொன்னதாலேயே உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். நான்கு முறை தேசிய விருது பெற்றவர். இவர் வாங்கிய விருதுகளுக்கு அளவே இல்லை. இவர் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல விருதுகளை பெற்றுக் கொண்டவர். இது வரை தமிழில் மணிரத்னம் இயக்கிய படங்களுக்கு மாத்திரமே ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். இவர் துப்பாக்கியில் இணைந்தது துப்பாக்கிக்கு அடுத்த வெற்றிக்கான காரணம். இவர் இளையதளபதி விஜய்யின் ஒரு சண்டைக் காட்சியை 7 கமெராக்கள் வைத்துப் படமாக்கி உள்ளாராம். இவரது ஒளி ஜாலத்தில் இளையதளபதி விஜய் திரைப்பட வரலாற்றின் அடுத்த கட்டத்திற்கு போகப்போவது நிஜம். கீழே சந்தோஷ் சிவன் இளையதளபதி விஜய்யைப் பற்றி
No comments:
Post a Comment