விஜய் & விஜய் இணையும் தலைவா படத்தில் இளையதளபதி அறிமுக பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்கு நடன இயக்குனர் ஹிந்தி பட உலகை சேர்ந்த சின்னி பிரகாஷ். இந்த பாடலுக்கு இளையதளபதியை ஆடவைத்த இயக்குனர், இளையதளபதியின் லாவகமான ஆட்டத்தை பார்த்து ஆடிப்போனார்.
இளையதளபதி விஜய் நன்றாக ஆடக்கூடியவர் என்று எனக்கு தெரியும் ஆனால் இவ்வளவு நளினமாக, ஸ்டைலாக, ஈசியாக ஆடுவார் என்று எனக்கு தெரியாது. நிச்சயமாக இந்த பாடல் நான் இயக்கிய டாப் 20 பாடல்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கும்.
தலைவா படத்தில் விஜயுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் அமலா பால். படத்திற்கு இசை ஜி.வீ.பிரகாஷ். கூகிள் கூகிள் பாடலுக்கு பின்னர் இந்த படத்திலும் விஜய் பாடியுள்ளார், கூடுதலாக காமெடி ஸ்டார் சந்தானமும் இந்த பாடலில் தன்னுடைய குரலை பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment