அண்மைக்காலமாக ரஜினி ரசிகர்களால் விஜய்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் செயல்கள் மேற்கூறிய சந்தேகத்தையே எல்லோர் மனதிலும் பரவலாக விதைத்திருக்கிறது. விஜய் ரசிகர்கள் என்றைக்குமே ரஜினிக்கு எதிராகவோ, ரஜினி ரசிகர்களுக்கு எதிராகவோ செயற்பட்டதில்லை.
ஆனால் இதற்கு நேர் எதிராக இருக்கிறது ரஜினி ரசிகர்களின் செயற்பாடு. எப்பொழுதும் விஜயையும், விஜய் ரசிகர்களையும் சீண்டுவதும், கிண்டல் பண்ணுவதும், கேவலப்பத்துவதும் என தொடர்கிறார்கள். இறுதியில் விஜயின் அடுத்த படத்திற்கான தலைப்பு “தலைவா” வில் வந்து நிற்கிறது பிரச்சினை. இதற்கான காரணத்தை... தேடி பார்த்தால் எதுவும் கிடைக்கவில்லை. துப்பாக்கி வசூலின் எதிரொலிதான் இந்த பிரச்சினைக்கு காரணமா? தெரியவில்லை..!!!
இப்போ “தலைவா” தலைப்பு பற்றி பார்ப்போம். இந்த தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள் சொல்லும் ஒரே காரணம் “தலைவர் என்றால் அது ரஜினி மட்டும்தான். அந்த பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது” என்பதுதான். உங்களுக்கு நாங்கள் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஒவ்வொரு ரசிகனுக்கும் அவர்களுடைய அபிமான நடிகன் தான் தலைவன். அதை புரிந்துகொள்ளுங்கள்.
அடுத்தது தமிழ்சினிமாவின் ஈடு இணையற்ற நடிகர் சிவாஜி. அவர் பெயரைத்தான் சூப்பர்ஸ்டார் தனது படம் ஒன்றிற்கான தலைப்பாக பயன்படுத்திக்கொண்டார். அப்போது சிவாஜி ரசிகர்களும் கோபப்படவில்லை, உங்களுக்கும் தவறு என்று படவில்லை.
சரி, இவை எல்லாவற்றையும் விடுங்கள். சுந்தர் சி முரட்டுக்காளை, கார்த்தி நான் மகான் அல்ல, அஜித் பில்லா, தனுஷ் பொல்லாதவன், படிக்காதவன் என ரஜினியின் தலைப்புக்களை பயன்படுத்தியபோது உங்கள் கோபம் எங்கே போயிற்று. இப்போ ஒரு புதுமுக நாயகன் தலைவன் என தலைப்பு வைத்திருக்கிறார். அவர்களை எல்லாம் எதுவும் சொல்லாமல் சிலருக்கு ஆதரவும் கொடுத்த நீங்கள் விஜயை மட்டும் எதிர்க்க காரணம் என்ன? விஜயில் மட்டும் உங்களுக்கு என்ன கோபம்?

No comments:
Post a Comment