இயக்குனர், நடிகர் விஜய்கள் இணைந்திருக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விரைவில் துவங்க இருக்கிறது.
படத்திற்கு முதலில் 'தங்கமகன்' என்று பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இப்படத்திற்கு 'தலைவா' என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
விஜய்யுடன் அமலாபால், சத்யராஜ், சந்தானம், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மிக முக்கிய வேடத்தில் மும்பையைச் சேர்ந்த பிரபல நாயகி நடிக்கவுள்ளார்.
'தலைவா' படத்திற்காக மும்பை கமலிஸ்தான் ஸ்டூடியோவில் இயக்குனர் நாகராஜ் மற்றும் சுனில் ஐஸ்வான் இருவரும் ஒரு பிரம்மாண்ட அரங்கத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அரங்கில் விஜயுடன் 200க்கும் மேற்பட்ட மும்பை நடன கலைஞர்கள், 50க்கும் மேற்பட்ட சென்னையை சேர்ந்த நடனக் கலைஞர்கள், 500க்கும் மேற்பட்ட ஜுனியர் ஆர்டிஸ்ட்கள் பங்கு பெறும் பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது.
'தலைவா தலைவா' என துவங்கும் இப்பாடலை நா.முத்துக்குமார் எழுத, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். இப்பாடலுக்கு சின்னிபிரகாஷ் நடனம் அமைக்கிறார்.
தொடர்ந்து இப்படத்திற்காக மும்பையில் 2 பாடல் காட்சிகள், 3 சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. 50 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பின், மார்ச் மாதம் படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்கின்றனர்.
இப்படத்தை மே மாதம் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment