‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் விஜய் இயக்கும் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்கு பிறகு விஜய், புதுமுக இயக்குனர் நேசன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார்.
அப்படத்திற்கு ‘ஜில்லா’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இயக்குனர் நேசன் ‘ஜெயம்’ ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இருவரும் இணையும் இரண்டாவது படம் இது.
ஏற்கெனவே ‘துப்பாக்கி’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். மேலும், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க முடிவு செய்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment