விஜய் & விஜய் இணையும் “தலைவா” படத்தில் நட்சத்திர பட்டாளங்களில் புதிதாக இணைந்துள்ளார் ஒரு ஹிந்தி படவுலகை சேர்ந்த நடிகை. புதிதாக இணைந்து இருக்கும் நடிகையின் பெயர் ராகிணி நந்த்வனி. இவர் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாக இருந்து சினிமாவில் நுழைந்துள்ளார்.
இந்த நடிகை நடிப்பதை ஊர்ஜிதம் செய்துள்ளார்கள் படக் குழுவினர். தனக்கு இந்த படத்தில் நடிப்பது சந்தோசம் அதை விட சந்தோசம் இளையதளபதியுடன் நடிப்பது. அவருடன் நடிப்பது எனபது பலரின் கனவு, எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மும்பையில் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் வாரத்தில் முடியும் எனவும் தெரியவருகிறது. மீண்டும் எப்பொழுது துவங்கும் எனபது பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை
No comments:
Post a Comment