துப்பாக்கி படம் 100வது நாளை கொண்டாடி உள்ளது. வசூல் ரீதியாக மட்டும் இல்லாமல், துப்பாக்கி படம் 100வது நாளையும் எட்டியுள்ளதால் இந்த 100வது நாளை ஒரு பெரிய விழாவாக எடுத்து கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
சுமார் ரூ.70 கோடி செலவில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இப்படம் முதல் இரண்டு வாரத்திலேயே போட்ட பணத்திற்கு மேல் வசூலை அள்ளியது. மேலும் ரூ.200கோடியை வசூலைத் தாண்டும் என்றும் சொல்லப்படுகிறது.சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு அதுவரை துப்பாக்கி வசூல் 180கோடியைத் தாண்டியுள்ளதாக சொல்லியுள்ளார்.
ஆரம்பத்தில் தலைப்பு பிரச்சினை, பணப்பிரச்சனை பின்னர் படம் வெளியான பின்னர் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு என்று பல பிரச்சினைகளை சந்தித்த துப்பாக்கி படம் எதிர்ப்புகளையும் கடந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டாகியுள்ளது. சென்ற வருடம் விஜய்க்கு நண்பன், துப்பாக்கி என்று இரு மெகா ஹிட் படங்கள் அமைந்ததில் மனுஷன் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார்.
பட வெற்றி அணைத்து தரப்பினரையும் மகிழ்வில் ஆழ்த்தி இருப்பதால் துப்பாக்கி வெற்றி விழா வெகு விமர்சையாக நடக்கப்போகிறது. படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் அழைத்து நினைவு பரிசு வழங்க இருக்கிறார்கள்.
கடைசியாக விஜய் நடித்த காவலன்,வேலாயுதம், நண்பன், துப்பாக்கி போன்ற படங்கள் ஹிட் அடித்துள்ளதால் விஜய்யின் இரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். துப்பாக்கி வெற்றி விழாவை எவ்வாறு வித்தியாசமாகக் கொண்டாடலாம் என்று அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தமிழில் ஹிட் அடித்த துப்பாக்கி படத்தை இப்போது ஹிந்தியில் அக்ஷ்ய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார் முருகதாஸ். அந்தப் படத்திற்கு அக்ஷ்ய் குமாரின் சம்பளம் மாத்திரம் 50கோடியாம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடிய துப்பாக்கி 100வது நாள்
No comments:
Post a Comment