என்னதான் சினிமாவில் கலர் கலரான கண்கவர் உடைகளில் தோன்றினாலும், கதர் என்கிற வெள்ளைச்சட்டையை அணிந்து கொண்டு நடந்தாலே தனி கம்பீரம்தான். அதனால்தான் முக்கியமான விழாக்கள் என்கிறபோது கதருககு மாறி விடுகிறார்கள் அரசியல் மற்றும் சினிமா விஐபிக்கள். அந்த வகையில், இதுவரை பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் சரி, படங்களில் நடிக்கும்போதும் சரி, கதர் அணியாத விஜய், தலைவா படத்துக்காக முதன்முதலாக கதர் சட்டை அணிந்து நடித்துள்ளாராம். படத்தின் அதிகப்படியான காட்சிகளில் இந்த சட்டை அணிந்தபடியே ஆக்டு கொடுத்துள்ளாராம்.
அப்படி அரசியல்வாதிகளைப்போல் படத்திலும் கதர் சட்டை அணிய என்ன காரணம்? என்று விசாரித்தபோது, ஜனரஞ்சகமான படம், காதல், காமெடி, செண்டிமென்ட்டை மையப்படுத்திதான் படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், அரசியல் டச்சும் படத்தில் உள்ளதாம். அதாவது, வாரிசாக இருந்தால் மட்டும்தான் அரசியல் தலைவராக வேண்டும் என்பதில்லை. உண்மையான விசுவாசம் இருந்தாலே போதும், அதுவே தலைவராவதற்கான எல்லா தகுதியையும் தரும் என்பதுதான் இந்த கதர் சட்டை பின்னணியில் இருக்கிற கருத்தாம். ஏன் படத்தின் மையக்கருவே இதுதான் என்றுகூட சொல்கிறார்கள். அப்படின்னா தலைவா அரசியல் படமாங்க? என்றால் அப்படியெல்லாம் இல்லீங்க என்று அடுத்த பதிலை கொடுக்கிறார்கள்.

No comments:
Post a Comment