சென்னை: தலைவா படத்தில் ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் முதன்முறையாக நடிக்கும் படம் தலைவா. துப்பாக்கிக்கு பிறகு விஜய் நடிக்கும் இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் விஜய் தலைவா படம் பற்றியும், அதில் விஜய்யை எடுத்தது பற்றியும் மனம் திறந்துள்ளார். அவர் அப்படி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
மதராஸபட்டினத்தைப் பார்த்து இம்பிரஸ்ஸான விஜய்
மதராஸபட்டினம் படத்தைப் பார்த்த இளைய தளபதி இயக்குனர் விஜயை அழைத்து நாம ஒரு படம் பண்ணுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் திட்டமாகவே இருந்தது. இந்நிலையில் தான் இயக்குனர் விஜய் இளைய தளபதியின் டேட்ஸ் வைத்திருந்த தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினை சந்தித்தார். அப்புறம் என்ன திட்டம் செயல் வடிவம் பெற்றது.
கதை கேட்ட உடனே ஓகே சொன்ன விஜய்
இயக்குனர் விஜய் கதை சொன்னவுடன் 15 நிமிடம் கழித்து விஜய் ஒரு சின்ன சிரிப்பு சிரித்து கையைக் குலுக்கியுள்ளார். அதன் பிறகு பட வேலைகள் துவங்கிவிட்டன.
ஒவ்வொரு சீனும் அதிரும்ல
தலைவா படத்தில் ஸ்டைல், ஆக்ஷன், மாஸ், சென்டிமென்ட் என்று அனைத்தும் இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும் என்றார் இயக்குனர்.
No comments:
Post a Comment