இன்றைய சினிமாவில் வெற்றியை தக்கவைத்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதே போல் வெற்றி வந்த பிறகும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் இந்த இரண்டையும் தன்வசம் வைத்துள்ளார் இளையதளபதி
இளையதளபதியின் திரை வரலாற்றில் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் இருந்த பொழுது, அதிரடியாக வந்து வெற்றிவாகை சூடிய படம் “வேலாயுதம்”. இளையதளபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினருக்கு பரிசு கொடுப்பது இயல்பு, அதேபோல் வேலாயுதம் படக்குழுவினருக்கு பரிசு கொடுக்கும் பொழுது அதில் பணிபுரிந்த இணை இயக்குனர்களுக்கு பரிசு கொடுக்காமல் அதிர்ச்சி பரிசை கொடுத்தார், அது அவர்கள் அனைவருக்கும் தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க ஒரு வாய்ப்பு.
புதிதாக வரும் இயக்குனர்களுக்கு பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடத்தல் அதை விட பெரிய வாய்ப்பு எதுவும் இருக்க முடியாது. அப்படி கொடுத்த வாக்கை இப்பொழுது காப்பாற்றி இருக்கிறார் இளையதளபதி. விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் இயக்குனர் நேசன். மேலும் வேலாயுதம் படத்தில் பணிபுரிந்த இணை இயக்குனர்களுக்கு தக்க நேரத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதையும் உறுதிசெய்துள்ளார்.
No comments:
Post a Comment