பெரும்பாலும் விஜய் நடிக்கும் படங்களில் அவரது கேரக்டர் பெயர் ரொம்ப எளிமையாக இருக்கும். அந்த வகையில் தலைவாவைத் தொடர்ந்து நடிக்கப்போகும் ஜில்லா படத்தில் விஜய்யின் பெயர் ஷக்தி என்கிறார்கள். ஆனால் அந்த ஷக்திக்கு ஒரு பட்டப்பெயர் உண்டாம். அதுதான் ஜில்லாவாம். அதை வைத்துதான் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். அதேபோல் மதுரைப்பெண்ணாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கும் ஒரு பரிட்சமான பெயரையே வைத்துள்ளார்களாம்.
மேலும், இப்படத்துக்காக மதுரைத் தமிழ் பேசி நடிக்கவுள்ள விஜய், இப்போதே அந்த ஊர் மக்கள் அதிகமாக பேசும் ஜாலியான வார்த்தைகள், கேலி, கிண்டல் ஆகியவற்றையும் சேகரித்து வருகிறாராம். அதனால் இந்த படத்தில் விஜய்யின் பேச்சுவழக்கு, நடிப்பு பாணி என அனைத்திலும் புதுமையை எதிர்பார்க்கலாமாம். குறிப்பாக, சினிமாத்தனம் என்பதை குறைத்து எதார்த்தமான கெட்டப்பிலேயே இப்படத்தில் நடிக்கிறாராம் விஜய்.

No comments:
Post a Comment