நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவ்வப்போது உதவிகள் வழங்கி வருவது தொடர்கிறது. குறிப்பாக மாவட்ட வாரியாக ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி தொன்னூர் உழவர் சந்தை மைதானத்தில் 15 ஜோடிகளுக்கு 51 வகையாக சீர்வரிசைகள் வழங்கி இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளார்.
அதையடுத்து, அவர்கள் அனைவரும் விஜய் காலில் விழுந்து வணங்கியபோது மனநிறைவோடு அவர்களை வாழ்த்தியிருக்கிறார். அதன்பிறகு மீடியாக்களுக்கு விஜய். அளித்த பேட்டியின்போது, இந்த மாதிரியான நீங்கள் இலவச திருமணங்கள் நடத்துவது எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டா? என்று கேள்வி எழுந்தபோது, அரசியல் வாழ்க்கைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
மேலும், இலவச திருமணம் என்பது ஏழை ஜோடிகளுக்கு என்னால் முடிந்த உதவி. இது எனக்கு மனசுக்கு நிறைவாக உள்ளது. எத்தனையோ சமூக சேவைகள் செய்தாலும் ஒரு தம்பதியை இணைத்து அவர்களது வாழ்க்கையை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால்தான் இந்த இலவச திருமணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறேன் என்றும் கூறியுள்ளார் விஜய்.

No comments:
Post a Comment