7வது விஜய் டி.வி. விருதுகள்! துப்பாக்கிக்கு ஐந்து விருதுகள்;ஷாரூக்கிற்கு செவாலியே சிவாஜி விருது!! - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 13, 2013

7வது விஜய் டி.வி. விருதுகள்! துப்பாக்கிக்கு ஐந்து விருதுகள்;ஷாரூக்கிற்கு செவாலியே சிவாஜி விருது!!

7th Vijay T.V. awards : Thupakki bags 5 awards 2013ம் ஆண்டுக்கான விஜய் டி.வி. விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்தது. விஜய் டி.வி., சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா படங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2012ம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கு விஜய் டி.வி. சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டு, சிறந்த நடிகர், நடிகை, ரசிகர்களை கவர்ந்த ஹீரோ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் தேர்வு செய்ய ரசிகர்கள் மூலம் ஓட்டுகள் பெறப்பட்டது. இதற்காக விஜய் டி.வியின் ரசிகன் எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் தமிழகம் முழுக்க வலம் வந்து ரசிகர்களிடம் நேரடியாக ஓட்டுக்களை பெற்றது. அதுமட்டுமின்றி இந்த விருதுகளை தேர்வு செய்ய பிரபல திரைநட்சத்திரங்கள் வெங்கட்பிரபு, ரத்னவேல், வெற்றிமாறன், யூகிசேது உள்ளிட்டவர்களும் நடுவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். அதன்படி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் டி.வியின் 7ம் ஆண்டு விருதுகள் பிரம்மாண்டமாக நடந்தது. அதில், 

துப்பாக்கி படத்திற்கு 5 விருதுகள்...

2012ம் ஆண்டு நடிகர் விஜய், நண்பன், துப்பாக்கி என இரண்டு படங்களில் நடித்து, இரண்டுமே ஹிட்டாக கொடுத்திருந்தார். இதில் துப்பாக்கி படத்திற்கு மட்டும் ஐந்து விருதுகள் கிடைத்தது.

* 2012ம் ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோ - விஜய் (நண்பன் - துப்பாக்கி)

* 2012ம் ஆண்டின் சிறந்த என்டர்டெயினர் ஹீரோ - விஜய்

* 2012ம் ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல் - கூகுள்... கூகுள்... (துப்பாக்கி)

* 2012ம் ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த டைரக்டர் - ஏ.ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி)

* 2012ம் ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த படம் - துப்பாக்கி


ஷாரூக்கானுக்கு செவாலியே விருது

இந்தி நடிகர் ஷாரூக்கானுக்கு சிறப்பு விருதாக செவாலியே சிவாஜி விருது வழங்கப்பட்டது. இதனை நடிகர் கமல்ஹாசன், ஷாரூக்கானுக்கு வழங்கினார். உடன் விஜய், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோரும் இருந்தனர்.


தேர்வு குழுவின் சிறப்பு விருது...

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா ஆகியோருக்கு தேர்வு குழுவின் சிறப்பு விருதும், லெட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய, ஆரோகனம் படத்திற்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் விஸ்வரூபம் படத்தில் உன்னை காணாத பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்து‌ தேசிய விருது பெற்று தந்த கதக் நடன கலைஞர் பிஜூ மகாராஜ்க்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. இதனை நடிகர் கமல்ஹாசன், பிஜூ மகாராஜ்க்கு வழங்கினார். 


7வது விஜய் டி.வி. விருதுகளின் விபரம்...

* சிறந்த நடிகர் - தனுஷ் (3)

* சிறந்த நடிகை - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)

* சிறந்த படம் - வழக்கு எண் 18/9

* சிறந்த டைரக்டர் - பாலாஜி சக்திவேல்

* சிறந்த படத்தொகுப்பு -  கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா)

* சிறந்த வில்லன் - சுதீப் (நான் ஈ)

* சிறந்த அறிமுக நடிகர் - விக்ரம் பிரபு (கும்கி)

* சிறந்த அறிமுக நடிகை - வரலெட்சுமி சரத்குமார் (போடா போடி)

* சிறந்த அறிமுக டைரக்டர் - பாலாஜி தரணிதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)

* சிறந்த இசையமைப்பாளர் - இமான் (கும்கி)

* சிறந்த அறிமுக இசையமைப்பாளர் - அனிருத் (3)

* சிறந்த ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் (பீட்சா)

* சிறந்த வசனகர்த்தா - ராஜேஷ் (ஒரு கல் ஒரு கண்ணாடி)

* சிறந்த காமெடி நடிகர் - சந்தானம் (ஒரு கல் ஒரு கண்ணாடி)

* சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - ராஜேந்திரன் (அரவான்)

* சிறந்த கலை இயக்குனர் - ஆர்.கே.விஜய் முருகன் (அரவான்)

* சிறந்த சண்டை அமைப்பு - அனல் அரசு (தடையற தாக்க)

* சிறந்த பாடலாசிரியர் - தாமரை (முப்பொழுதும் உன் கற்பனைகள்)

* சிறந்த‌ பின்னணி பாடகி - ரம்யா (நீதானே என் பொன்வசந்தம்)

* அதிகம் பிரபலமடைந்தவருக்கான விருது - உதயநிதி ஸ்டாலின் (ஒரு கல் ஒரு கண்ணாடி)

விழாவில் நடிகர் கமல்ஹாசன், கதக் நடன கலைஞர் பிஜூ மகாராஜ், ஷாரூக்கான், விஜய், த்ரிஷா, ஆர்யா, தனுஷ், தமன்னா, சமந்தா, சித்தார்த், முருகதாஸ், அல்லு சிரிஸ், லைலா, லட்சுமி ராய், நீத்து சந்திரா, ஐஸ்வர்யா தனுஷ், ஸ்ரீகாந்த், கவுதமி, சிவகார்த்திகேயன், ராதிகா சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் போது நடிகர் ஷாரூக்கானும், விஜய்யும் கூகுள் கூகுள் பாடலுக்கு அசத்தலாக ஒரு ஆட்டம் போட்டனர். மேலும் வரலெட்சுமி, தமன்னா, நடன கலைஞர் பிஜூ மகாராஜ் குழுவினரின் அசத்தல் நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதோடு ஆர்யா-நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ராஜா ராணி படத்தின் டீசரும் இந்த விழாவில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியினை நடிகர் மாதவனும், விஜய் டி.வி. கோபிநாத்தும் தொகுத்து வழங்கின

No comments:

Post Top Ad

Responsive Ads Here